தமிழ்நலன் காக்கும் பொறுப்பு ஊடகத்துறையினரிடமே உள்ளது! – இலக்குவனார்திருவள்ளுவன்
தமிழ்நலன் காக்கும் பொறுப்பு ஊடகத்துறையினரிடமே உள்ளது! எங்கெங்கு காணினும் தமிழ்க் கொலை என்பதே இன்றைய ஊடகங்களின் நிலைப்பாடாக உள்ளது. தமிழ் அழியாமல் காக்கப்படவும் தமிழர்நலன் பேணப்படவும் உலெகங்கும் தமிழர்கள் உரிமையுடன் வாழ்ந்திடவும் ஊடகத்துறையினர் முயன்றால்மட்டுமே இயலும். நல்லதமிழில் பேசுநரும் எழுதுநரும் இருப்பினும் நற்றமிழ்ப் படைப்புகளை வெளியிடும் இலக்கிய இதழ்கள் வரினும் நற்றமிழ் பரவுவதற்குப் பெரும்பாலான ஊடகங்கள் துணை நிற்பதில்லை. துணை நிற்காததுடன் தமிழ்க் கொலைகளை அரங்கேற்றுவைதயே முழுநேரச் செயல்திட்டமாகக் கொண்டுள்ளன. எனவேதான் தமிழறிஞர்களின் அரும்பணிகளும் தமிழன்பர்களின் தடையிலா முயற்சிகளும் விழலுக்கு…