பாடம் புகட்டிய மக்கள்! – பாடம் கற்றதா நடிகர் சங்கம்?   தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மட்டைப் பந்தாட்டம் இன்று(சித்திரை 04, 2047 / ஏப்பிரல் 17, 2016) நடந்து முடிந்துள்ளது. விளையாட்டைப் பரப்புவதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் உண்மையில் பாராட்டத்தக்கன. 1 வாரம் முன்னதாகவே கலைநிகழ்ச்சிகள் மூலம் விளம்பரப்படுத்தியதும் விழா நாளன்று கலைநிகழ்ச்சிகள் நடத்தியதும், பிற மாநிலக் கலைஞர்களைத் திருமணத்திற்கு அழைப்பதுபோல் சந்தித்துத் துணிமணிகள், வெற்றிலை, பாக்கு மதிப்புடன் அழைத்ததும் என நன்றாகவே திட்டமிட்டிருந்தனர். இருப்பினும் அடிப்படையே ஆட்டம் கண்டதால் எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை….