(அதிகாரம் 006. வாழ்க்கைத் துணை நலம் தொடர்ச்சி) 01. அறத்துப் பால்         02. இல்லற இயல்     அதிகாரம் 007. மக்கள் பேறு        ஒழுக்கமும், நல்அறிவும் நிறைந்த,      மக்களைப் பெறுதல் பெரும்பேறு.   பெறும்அவற்றுள், யாம்அறிவ(து) இல்லை, அறி(வு)அறிந்த      மக்கள்பே(று), அல்ல பிற.        அறி[வு]அறிந்த மக்கள் பேறே,        பேறுகளுள் எல்லாம் பெரும்பேறு.        எழுபிறப்பும், தீயவை தீண்டா, பழிபிறங்காப்    பண்(பு)உடை மக்கள் பெறின்.        பழிதராப் பண்புப் பிள்ளைகளால்,…