பாலியல் வன்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுவோம்! – இல.அம்பலவாணன்
பாலியல் வன்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுவோம்! மீண்டும் அதே கூக்குரல்! அதே ஓலம்! அதே குற்றச்சாட்டுகள்! அதே குறைகூறல்கள்! மீண்டும் அதே கருத்து வெளிப்பாடுகள்! அதே உணர்வுவயப்பட்ட நிலைமை! அதே முகங்கள்! அதே குரல்கள்! மீண்டும், ஆம், மீண்டும்….! கடந்த திசம்பர் மாதம் 2012இல் நிருபயா மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக அதே குரல்கள் அதே குறைகூறல்கள், அதே குற்றச்சாட்டுகள். யாருக்கு எதிராக? யார் மீது? அதுவும் மீ;ண்டும், அதே போல – குமுகாயத்தின் மேல், சட்டம் தரும் பாதுகாப்பு மேல், காவல்துறை மேல்,…