மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 30
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 29 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 12 “எண்ணத்தறியிற் சிறு நினைவு இழையோட இழையோடமுன்னுக்குப் பின் முரணாய் முற்றும் கற்பனையாய்ப்பன்னும் பகற்கனவாய்ப் பாழாய்ப் பழம் பொய்யாய்என்னென்ன நினைக்கின்றாய் ஏழைச் சிறுமனமே!” உடல் ஓய்ந்து நோயில் படுத்துவிட்டால் தன்னைச் சுற்றிலும் காலமே அடங்கி, ஒடுங்கி, முடங்கி இயக்கமற்றுப் போய்விட்டது போல் எங்கும் ஓர் அசதி தென்படும். அப்போது பூரணியை ஆண்டுகொண்டிருந்த ஒரே உணர்வு இந்த அசதிதான். அரவிந்தனைக் காண முடியவில்லை என்ற ஏக்கமும், அவன் தன்னை மறந்து புறக்கணிக்கத் தொடங்கிவிட்டானோ என்ற…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 29
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 28 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 11 தொடர்ச்சி மனச்சான்றே பூரணிக்கு எதிரியாகி அவளை வாட்டியது. இரண்டு கைகளாலும் தலையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் அவள். வேதனைச் சுமை மண்டையை வெடிக்கச் செய்துவிடும் போல் இருந்தது. சைக்கிள் ரிக்குசா ஓடிக் கொண்டிருந்தது. சைக்கிள் ரிக்குசாவுக்கு முன்னும் பின்னும் இரண்டு பக்கங்களிலும் சாவி கொடுத்த கடிகாரம் போல் மதுரை நகரம் இயங்கிக் கொண்டிருந்தது. மதுரை நகரத்து வாழ்வு ஓடிக் கொண்டிருந்தது. ரிக்குசாவுக்கு வாடகையைக் கொடுத்து அனுப்பிவிட்டு அவள் வீட்டு…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 28
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 27 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 11 தொடர்ச்சி பூரணி தேநீர் பருகிவிட்டுக் கோப்பையை வைத்தபோது வசந்தா மேலேயிருந்து எங்கோ வெளியே புறப்படுகிறார் போன்ற கோலத்தோடு வந்து கொண்டிருந்தாள். “வசந்தா! உன் மேல் எனக்கு ஒன்றும் மனவருத்தம் இல்லை. நீ கேட்ட கேள்விகளுக்குத்தான் அப்படி நான் பதில் சொல்ல வேண்டியிருந்தது. ஒன்றும் மனத்தில் வைத்துக் கொள்ளாதே” என்று அவளைச் சமாதானப்படுத்துகிற முறையில் சொன்னாள் பூரணி. ஆனால் இந்தச் சொற்களைக் கேட்டதாகவோ, பொருட்படுத்தியதாகவோ காட்டிக் கொள்ளாமல் முகத்தைக் கோணிக் கொண்டு…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 27
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 26 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 11 மண்மீதில் உழைப்பார் எல்லாம் வறியராம்! உரிமை கேட்டால்புண்மீதில் அம்பு பாய்ச்சும் புலையர் செல்வராம்! இதைத்தன்கண்மீதில் பகலில் எல்லாம் கண்டு கண்டு அந்திக்குப் பின்விண்மீனாய்க் கொப்பளித்த விரிவானம் பாராய் தம்பி. – பாரதிதாசன் மனிதர்கள் ஒருவர் மேல் வெறுப்பும் பொறாமையும் கொண்டுவிட்டால் கைகூடாமல் எவ்வளவு பெரிய கொடுமைகளையும் செய்வார்களென்று பூரணி கதைகளில்தான் படித்திருந்தாள். கதைகளில் அவை பொருத்தமில்லாமல் செயற்கையாகத் தோன்றும் அவள் சிந்தனைக்கு. இப்போதோ அப்படி ஒரு கொடுமை…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 26
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 25 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 10 தொடர்ச்சி திருநாவுக்கரசுக்குப் பள்ளிக்கூடப் படிப்பின் கடைசி ஆண்டாக இருந்ததனால் படிப்புச் செலவு சிறிது மிகுதியாயிருந்தது. இப்பொழுது துன்பங்களைப் பெரிதாக நினைத்து அழுந்தி அலைபடுவதே இல்லை அவள். குறைவிலும் நிறைவாக இருக்கிற இரகசியத்தை அரவிந்தன் அவளுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தான். அன்றைக்கு வெள்ளிக்கிழமை. மங்கையர் கழகத்தில் நல்ல கூட்டம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு சிறப்புக் கூட்டம் இருக்கும். அதில் எல்லாரும் கலந்து கொண்டு சொற்பொழிவைக் கேட்கலாம். பூரணி அன்று ‘திலகவதியார் சரித்திரம்’…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 25
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 24 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 10 தொடர்ச்சி ஆனால் அப்படிச் சொல்ல வாயெழவில்லை. நடுத்தெருவில் திடீரென்று அவளைச் சந்தித்த கூச்சம் தடுத்தது. புன்னகைக்குப் பதிலாகப் புன்னகை மட்டும் செய்தான். பூரணி தனக்குத்தானே நினைத்துப் பார்த்தாள். ‘புது மண்டபத்து புத்தக வியாபாரி உட்பட பெரும்பாலோர், பிறருக்குச் சேரவேண்டிய பொருளையும் தாமே அபகரித்துக் கொண்டு வாழ ஆசைப்படும் இதே உலகில்தான் அரவிந்தனும் இருக்கக் காண்கிறேன். தனக்குக் கிடைக்கிறதையெல்லாம் பிறருக்கே கொடுத்து மகிழும் மனம் இந்த அரவிந்தனுக்கு எப்படித்தான் வந்ததோ?’…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 24
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 23 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 10 உடல்குழைய என்பெலாம் நெக்குருகவிழிநீர்கள் ஊற்றென வெதும்பி ஊற்றஊசி காந்தத்தினைக் கண்டணுகல் போலவேஓர் உறவும் உன்னியுன்னிப்படபடென நெஞ்சம் பதைத்து உள் நடுக்குற… — தாயுமானவர் இயல்பாகவே அரவிந்தனுக்கு மென்மையும் நளினமும் இணைந்த உடம்பு வாய்த்திருந்தது. எந்த இடத்திலாவது இலேசாகக் கிள்ளினால் கூட இரத்தம் வருகிற உடம்பு அது. உரோஜாப்பூவின் மென்மையும் சண்பகப் பூவின் நிறமும் கொண்ட தேகம் அவனுடையது. அந்த உடலில் வலிமை உண்டு. ஆனால் முரட்டுத்தனம் கிடையாது. அழகு…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 23
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 22 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 9 தொடர்ச்சி ஒவ்வொரு நாளும் அவள் மங்கையர் கழகத்து வகுப்புகளுக்காக மாலையில் மதுரைக்குப் புறப்படும்போது தம்பிகள் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருக்க மாட்டார்கள். அதனால் குழந்தையையும் வீட்டுச் சாவியையும் ஓதுவார் வீட்டிலோ பக்கத்தில் கமலாவின் தாயாரிடமோ ஒப்படைத்துவிட்டுப் போவாள். தம்பிகள் வந்தவுடன் சாவியை வாங்கிக் கொண்டு குழந்தையையும் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் விடுவார்கள். இரவு ஒன்பதரை மணி சுமாருக்கு பூரணி நகரத்திலிருந்து வீடு திரும்புவாள். சில நாட்களில் தம்பிகளும் தங்கையும் அவள் வருமுன்பு…