மஞ்சளாறு அணையில் தண்ணீரை நிறுத்த உழவர்கள் எதிர்பார்ப்பு

மஞ்சளாறு அணையில் தண்ணீரை நிறுத்த உழவர்கள் எதிர்பார்ப்பு   தேனி மாவட்டத்தில் உள்ள மஞ்சள் ஆறு அணையில் தற்பொழுது 44 அடி தண்ணீர் உள்ளது. மஞ்சளாறு அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரானது தேனி, திண்டுக்கல்; மாவட்ட மக்களின் வேளாண்மைக்கும், குடிநீர்த் தேவைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர்ப் பெய்த கனமழையை ஒட்டி மஞ்சளாறு அணை திறக்கப்பட்டது. இதன் மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் நிரம்பி மறுகால் பாய்கிறது. இந்நிலையில் தலையாறு, மூலையாறு, வறட்டாறு ஆகிய ஆறுகளில் இருந்து வரும்…

மஞ்சளாறு அணை : கால்வாய்கள் தூர்வாரப்படாததால் உழவர்கள் அல்லல்

தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையின் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் உழவர்கள் அல்லல்பட்டு வருகின்றனர். தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையில் மொத்தம் 13 மடைகள் உள்ளன. இவற்றுள் ஒன்று முதல் எட்டுவரையுள்ள மடைகள் தூர்வாரப்பட்டன. அதன்பின்னர் 8 இலிருந்து 13வது வரை உள்ள மடைகள் தூர்வாரப்படவில்லை. இந்த மடையில் இருந்து வரும் தண்ணீரை நம்பி ஏறத்தாழ 1,800 காணி நிலம் உள்ளது. இந்த 1,800 காணியில் நெல், பருத்தி, மக்காச்சோளம், கடலை, தட்டப்பயிறு முதலான பயிர்வகைகள் பயிரிடப்படுகின்றன.. இப்பகுதியில் குறைந்தது 40 நாட்களாது தண்ணீர்…

தூய்மைக்கேடாக்கப்படும் மஞ்சளாறு அணை

  தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை நாளுக்கு நாள் தூய்மைக்கேடாக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தொற்று நோய் பரவும் பேரிடர் உள்ளது.   தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை திண்டுக்கல், தேனி மாவட்டங்களின் உழுதொழில், குடிநீர்த் தேவைகளுக்காகக் கட்டப்பட்டது. இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான காணி(ஏக்கர்) பரப்பளவில் பயிர் நிலங்கள் பயன்அடைந்து வருகின்றன. இதே போல மஞ்சளாறு அணையில் உள்ள நீரை நம்பி ஊராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவை பயனடைந்து வருகின்றன.   இப்பொழுது மஞ்சளாறு அணை ஆடு, மாடு போன்ற கால்நடைகள்…

நீர்நிரம்பி வரும் மஞ்சளாறு அணை! நீரைச் சேமிக்குமா மாவட்ட நிருவாகம்?

  மேற்குதொடர்ச்சிமலைப் பகுதியில் கனமழையால் நிரம்பி வரும் மஞ்சளாறு அணை     தேவதானப்பட்டி அருகே உள்ள மேற்குமலைத்தொடர்ச்சியில் கடந்த ஒரு வாரகாலமாக மழை பொழிந்து வருவதால் மஞ்சளாறு அணை நிரம்பி வருகிறது.   மேற்குத்தொடர்ச்சி மலையில் கடந்த ஒரு வாரகாலமாக மழை பொழிந்து வருவதால் மஞ்சளாறு அணை நிரம்பி வருகிறது.   கொடைக்கானல் பகுதியிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் மழை பொழிவதால் மஞ்சளாறு அணை, மருதாநதி அணை, பேரிசம் ஏரி, சண்முகா அணை முதலான பல்வேறு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. கொடைக்கானல்…