காதல் கொள்வோரே கிட்டாதாயின் வெட்டென மறப்பீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்
காதல் கொள்வோரே கிட்டாதாயின் வெட்டென மறப்பீர்! காதல் என்பது வாழ்வியல் அறம். ஆனால், இரு மனமும் ஒத்து, நல் ஒழுக்கத்துடன் சிறந்து வாழும்பொழுதுதான் காதல் என்பது அறமாகிறது. உண்மைக்காதல் அவ்வாறுதான் இருக்கும். ஆனால், ஆசை, ஈடுபாடு, ஈர்ப்பு, முதலியவற்றையும் காதலாக எண்ணுவதுதான் குழப்பங்களுக்கும் குற்றங்களுக்கும் காரணமாய் அமைகின்றது. மாந்த இனம் எப்பொழுது தோன்றியதோ அப்பொழுதே காதல் உணர்வும் தோன்றியுள்ளது. காதல் தோன்றியபொழுதே ஒரு தலைக்காதலும் தோன்றியுள்ளது. ஆனால், முன்பெல்லாம் ஒரு தலைக்காதல்வயப்பட்டவர்கள், காதல் நிறைவேறத் தங்களைத்தான் வருத்திக் கொண்டார்கள். இப்பொழுது தான்விரும்பி…