பெறுமதியான பங்காளியா இலங்கை? – புகழேந்தி தங்கராசு
பெறுமதியான பங்காளியா இலங்கை? வாகரையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை விலங்குகளை வேட்டையாடுவது போலத் தமிழர்களை விரட்டி விரட்டிக் கொன்று குவித்த பிறகு, மகிந்த இராசபக்ச கூசாமல் பேசிய சொற்களில் ஒன்று – ‘மீள்குடியேற்றம்’. 2009 முதல் 2014 வரை மகிந்தன் பயன்படுத்திய அந்தப் பித்தலாட்ட சொல், இப்போது மைத்திரியின் வசம். ஆறே மாதத்தில் தமிழர்கள் அனைவரும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு விடுவார்கள் -என்று இப்போது அவர் சோதிடம் சொல்வது, தமிழர்களையும் பன்னாட்டு சமூகத்தையும் எப்படியாவது ஏமாற்றியாக வேண்டும் என்கிற எண்ணத்தின் விளைவு. இப்போது…
ஒரு போரால் மட்டுமே தோற்று விடுவதில்லை…2/2 – புகழேந்தி தங்கராசு
2/2 தமிழர் தாயகத்தைக் காப்பது… தமிழ் தேசிய அடையாளங்களைக் காப்பது… தமிழரின் தன்னாட்சி உரிமையை மீட்பது… இவைதாம் பிரபாகரன் என்கிற அப்பழுக்கற்ற மனிதனின் நோக்கங்களாக இருந்தன. சிங்களக் குமுகாயத்தை அழித்து ஒழிப்பது எந்தக் காலத்திலும் புலிகளின் நோக்கமாக இருந்ததில்லை. தமிழ்க் குமுகாயத்தின் மானத்தை மீட்பதென்கிற பெயரில், அடுத்தவரின் மானத்துக்குக் கறை ஏற்படுத்துகிற செயலில் பிரபாகரனின் தோழர்கள் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. வெற்றி பெற்ற போர்முனை ஒன்றில், உணர்ச்சிவயப்பட்ட நிலையில் சிங்களத் தேசியக் கொடியை எரித்த போராளிகளைக் கடுமையாகக் கண்டித்த பிரபாகரனின் நேர்மையைப் புரிந்தும்…
ஒரு போரால் மட்டுமே தோற்று விடுவதில்லை1/2 – புகழேந்தி தங்கராசு
1/2 ஒரு தலைமுறையையே தலைநிமிரச் செய்த பிரபாகரனின் பிறந்தநாளை, எண்ணூர் அசோக்கு இலேலண்டுத் தொழிலாளர்களுடன் சேர்ந்து, மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் வை.கோ கொண்டாடியதுதான், இந்த வாரத்தின் நெகிழ்ச்சி நிகழ்ச்சி. காலை ௭ (7.00) மணிக்குத் தொழிலாளர்களுக்கு இனிப்புருண்டை (இலட்டு) வழங்கத் தொடங்கியவர், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்குக் கொடுத்து முடிக்கிற வரை சலிக்கவேயில்லை. இத்தனைக்கும் தொழிலாளத் தோழர்கள், வை.கோ-விடமிருந்து இனிப்புப் பெறுவதைக் காட்டிலும், அவருடன் கைக்குலுக்குவதில்தான் அதிக அக்கறை காட்டினர். அசோக்கு இலேலண்டிலிருந்து மகிழ்ச்சியுடன் திரும்பிய ஓரிரு மணி நேரத்தில், யாழ்ப்பாணம் அருகே ௧௮ (18)…
நீறு பூத்த நெருப்பு 2/2 – புகழேந்தி தங்கராசு
(நீறு பூத்த நெருப்பு 1/2 தொடர்ச்சி) நீறு பூத்த நெருப்பு 2 எட்டுக் கோடித் தமிழக மக்களின் முதல்வராயிற்றே – என்று கூடப் பாராமல், உடன்பிறந்தாள் செயலலிதா குறித்துப் பொறுக்கித்தனமாக நையாண்டிச் சித்திரம்(கார்ட்டூன்) போட்ட திவயினதான், இப்போது இப்படி எழுதுகிறது. எந்த வழக்கும் இல்லாமல் ௨௦(20) ஆண்டுகளாகச் சிறையில் வைக்கப்பட்டிருந்த ஏதுமறியாதவர்கள் மீது ‘புலிகள்’ என முத்திரை குத்தப் பார்க்கிறது. சிறையில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என்று கற்பூரம் கொளுத்தி ஆணையிட்டு விட்டு, அரசியல் கைதிகள் போராடிய பிறகு உண்மையை…
நீறு பூத்த நெருப்பு 1/2 – புகழேந்தி தங்கராசு
நீறு பூத்த நெருப்பு 1 ‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’ – என்பதைப் போலவே, ‘அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்’ – என்பதும் இலங்கைக்குப் பொருந்தாது போலிருக்கிறது. ஐ.நா.வும் உலக நாடுகளும் மிதிமிதியென்று மிதித்தும் இம்மியும் நகரவில்லை இலங்கை. இவர்கள் உண்மையாகவே மிதிக்கிறார்களா, முன்பு போலவே மிதிப்பது போல நடிக்கிறார்களா என்கிற ஐயம் எழுவதைத் தவிர்க்கவே முடியவில்லை. ‘ஐ.நா குழுவையெல்லாம் நுழைய விடவே முடியாது’, என்று தொடர்ந்து அடம்பிடித்து வந்த இலங்கையின் இடுப்பெலும்பை முறித்தவர், பிரிட்டன் தலைமையமைச்சர் தாவீது கேமரூன்…