(அதிகாரம் 060. ஊக்கம் உடைமை தொடர்ச்சி) 02.  பொருள் பால் 05.  அரசு இயல்  அதிகாரம் 061.  மடி இன்மை                          குடும்பத்தையும், குடியையும்  உயர்த்த முயல்வார் விடவேண்டிய சோம்பல்   குடிஎன்னும் குன்றா விளக்கம், மடிஎன்னும்       மா(சு)ஊர, மாய்ந்து கெடும்.       சோம்பல்தூசு படிந்தால், அணையாக்           குடும்ப விளக்கும் அணையும்.   மடியை, மடியா ஒழுகல், குடியைக்,       குடியாக வேண்டு பவர்.         குடியை, உயர்ந்த குடியாக்க         விரும்புவார், சோம்பலை விலக்குக.   மடிமடிக் கொண்(டு)ஒழுகும், பேதை பிறந்த       குடி,மடியும்…