ஈழத்தமிழர்களே! ஊர்ப்பெயர்களைச் சிதைக்காதீர்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஈழத்தமிழர்களே! ஊர்ப்பெயர்களைச் சிதைக்காதீர்கள்!   அயலவர்கள் அவர்களின் மொழி உச்சரிப்பிற்கேற்ப நம்  ஊர்ப்பெயர்களை உச்சரித்தனர். திருநெல்வேலியைத் ‘தின்ன வேலி’ என்றும் திருவல்லிக்கேணியை ‘டிரிப்பிளிகேன்’ என்றும் சொல்வதுபோல் எண்ணற்ற ஊர்களை இவ்வாறுதான் தவறாக நாம் தமிழிலும் ஒலித்தோம். ஒருபுறம் ஆரியமயமாக்கப்பட்ட பெயர்கள் மறுபுறம் தவறான உச்சரிப்பிலான பெயர்கள் என இருபுறமும் தாக்குதல் நடைபெற்றது. திராவிட இயக்க எழுச்சியாலும் தனித்தமிழியக்கத்தினர் தொண்டினாலும் தமிழறிஞர்களின் ஆற்றுப்படுத்தினாலும் ஓரளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் தமிழ்மய மாற்றங்கள் தேவை.   இவ்வாறு நம்மிடையே குறை  வைத்துக்கொண்டு, ஈழத்தமிழர்களை மட்டும் குற்றம்…

மட்டக்களப்பு விடிவு காண வாருங்கள்! – ஞா.கிருட்டிணப்பிள்ளை

மட்டக்களப்பு விடிவு காண வாருங்கள்!   “மட்டக்களப்புக்கு விடிவு காண வாருங்கள்” என்னும் தலைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டக் கிழக்கு மாகாண அவை உறுப்பினர் ஞா.கிருட்டிணப்பிள்ளை துண்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.   அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோரின் விவரங்கள், கைப்பற்றப்பட்ட எமது மக்களின் சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றச் சிக்கல் ஆகியவற்றுக்கு நாம் முதன்மையாக முகம் கொடுக்கும் வேளையில், நிலையான அரசியல் தீர்வுக்கான நகர்வையும், எமது அரசியல் பயணத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கிற வகையில் தெரிவிக்காமல் செய்து வருகின்றோம் என்பதை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன்.  மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற…

மட்டக்களப்பில் ‘நாங்கள்’ இயக்கத்தின் மக்கள் நலப்பணி!

  மட்டக்களப்பில் ‘நாங்கள்’ இயக்கத்தின் மக்கள் நலப்பணி!    மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடிப் பகுதியில், கட்டாயப்படுத்தப்பட்டு கடத்தப்பட்டு காணாமல்போகச்செய்யப்பட்ட நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டுப் பெண்களை தலைமைத்துவமாகக்கொண்டுள்ள குடும்பங்களில், இருபத்தொரு குடும்பங்களுக்கு   தற்றொழில் முயற்சிக்கான ஆதாரம் வழங்கப்பட்டுள்ளது.   “நெல்லு குற்றி அரிசியாக்கி விற்பனை செய்தல், இடியப்பம் அவித்து உணவகங்களுக்கு விற்பனை செய்தல்” முதலான குடிசைத்தொழில்களில் ஈடுபட்டுவரும் குடும்பங்களுக்கே சிறுதொகை நிதி ஆதாரம் வழங்கப்பட்டுள்ளது.   ‘கொம்மாந்துறை கிழக்கு மாதர் வள அபிவிருத்திச்சங்க’ச் சார்பாளர் திருமதி மதனா ஒழுங்கமைப்பில் நடைபெற்ற குறித்த மக்கள் நலத்திட்ட நிகழ்ச்சியில், ‘நாங்கள்’…