எதுகை மோனை தமிழ்மக்களுக்கு இயல்பாகவே கைவரப் பெற்றவை!  நாடோடிப் பாடல்களுக்கென்று சிறப்பான சில இயல்புகள் உண்டு. குறிப்பிட்ட ஒரு பாடலை முதல் முதலில் யாரேனும் ஒருவர் இயற்றியிருக்கத்தான் வேண்டும். அவர் இலக்கியப்புலமை படைக்காவிட்டாலும் மற்ற பாமரர்களைப் போல் இல்லாமல் ஓரளவு சொல்வன்மை உடையவராகவே இருப்பார். கூலி வேலை செய்யும் பெண்கள் தம்மிடம் உள்ள இயற்கையான ஆற்றலால் அவ்வப்போது பாடல்களைப் பாடுவதும் உண்டு. இலங்கையில் மட்டக் களப்பு என்னும் பகுதியில் இன்றும் இவ்வாறு பாடல்கள் முளைக்கின்றன.1 எதுகை, மோனை, ஓசை என்னும் மூன்றும் தெரிந்தவர்கள் பாடல்களைப்…