குறள் கடலில் சில துளிகள் 29. – பெரியாரைப் பேணுக! – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் 28 – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 29 . பெரியாரைப் பேணுக அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல். (திருவள்ளுவர், திருக்குறள், பெரியாரைத் துணைக்கோடல், குறள் எண் ௪௱௪௰௩ – 443) பதவுரை: அரியவற்றுள்-அருமையானவற்றுள், (அருமையான பேறுகளுள்); எல்லாம்-அனைத்தும்; அரிதே-அருமையானதே; பெரியாரை-பெருமையுடையவரை; பேணி-விரும்பி; நலன்பாராட்டி; உவப்பன செய்து; தமர்-தம்மவர்; தமக்கு நெருக்கமான உறவினர், தமக்குச் சிறந்தாராக; கொளல்-கொள்க. பொழிப்புரை : பெரியோரையே விரும்பித் தமக்குரிய சுற்றத்தினராகப் பெற்றுக் கொள்ளுதல், பெறுதற்கரிய பேறுகளுள் எல்லாம்…
குறள் கடலில் சில துளிகள் 28. – துன்பம் வந்ததை நீக்கி, வருவதிலிருந்து காப்போரைத் துணையாகக் கொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் 27. அறமறிந்த அறிவு உடையவரைத் துணையாகக் கொள்க! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 28. துன்பம் வந்ததை நீக்கி, வருவதிலிருந்து காப்போரைத் துணையாகக் கொள்க! உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல். (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், குறள் எண்:௪௱௪௰௨ – 442) பதவுரை: உற்ற-நேர்ந்த; நோய்-துன்பம்; நீக்கி-விலக்கி; உறாஅமை-வராத வண்ணம்; முன் – (வரும்)முன்னால்; காக்கும்-காப்பாற்றும்; பெற்றியார்-தன்மையுடையார், இயல்புடையர்; பேணி-நலன்பாராட்டி,; கொளல்-கொள்க. பொழி்ப்புரை: வந்த துன்பம் நீக்கி, வர உள்ள…
குறள் கடலில் சில துளிகள் 27. அறமறிந்த அறிவு உடையவரைத் துணையாகக் கொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் 26. விருப்பத்தைப் பகைவர் அறியப் புலப்படுத்தாதே! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 27. அறமறிந்த அறிவு உடையவரைத் துணையாகக் கொள்க! அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல். (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல் குறள் எண்: ௪௱௪௰௧ – 441) பதவுரை: அறன்-அறவழி; அறிந்து-தெரிந்து; மூத்த-முதிர்ந்த; அறிவுடையார்-அறிவுடையவர்; கேண்மை-உறவு, நட்பு; திறன்-கூறுபாடு; அறிந்து-தெரிந்து; தேர்ந்து-ஆராய்ந்து; கொளல்-கொள்க. பொழிப்பு: அறநெறியை அறிந்து முதிர்ந்த அறிவினையுடையாரது நட்பை அதன் ஆற்றலை அறிந்து, ஆராய்ந்து அடைய…
குறள் கடலில் சில துளிகள் . 26. விருப்பத்தைப் பகைவர் அறியப் புலப்படுத்தாதே! – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் . 25. உன்னையே வியந்து கொள்ளாதே! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 26. விருப்பத்தைப் பகைவர் அறியப் புலப்படுத்தாதே! காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்:குற்றங்கடிதல் குறள் எண்: ௪௱௪௰ – 440) பதவுரை: காதல-காதலித்த பொருள்கள்; விரும்புகின்ற பொருள்கள்; காதல்-விருப்பம்; அறியாமை-தெரியாமல்; உய்க்கிற்பின்-செலுத்த வல்லனாயின். பொழிப்பு: தன்விருப்பம் வெளிவராவாறு அடக்கி வாழ்ந்தால், பகைப்பார் தோற்பார் (பேரா.வெ.அரங்கராசன்). தனக்கு விருப்பமானவற்றைப் பிறர் அறியாதபடி அடக்கி வைத்திருப்பவனிடம் பகைவரின் வஞ்சகச்…
குறள் கடலில் சில துளிகள் . 25. உன்னையே வியந்து கொள்ளாதே! – இலக்குவனார் திருவள்ளுவன்
( குறள் கடலில் சில துளிகள் 24. கஞ்சத்தனத்தை என்றும் எண்ணாதே! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 25. உன்னையே வியந்து கொள்ளாதே! வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை. ( திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: குற்றங்கடிதல், எண்: ௪௱௩௰௯ – 439) பொழிப்பு: எப்பொழுதும் தன்னை வியந்து கொண்டாடாதே; நன்மை தராத செயல்களை மனத்தாலும் விரும்பாது ஒழிக! (சி.இலக்குவனார்) பதவுரை: வியவற்க-வியந்து கொள்ளற்க, பெருமிதம் கொள்ளற்க, புகழ்ந்து கொள்ளற்க; எஞ்ஞான்றும்-எப்பொழுதும்; தன்னை-தன்னை; நயவற்க-விரும்பாதீர்; நன்றி-நன்மை; பயவா-விளைக்காத; வினை-செயல்….
குறள் கடலில் சில துளிகள் 7 . பகைவராலும் அழிக்க முடியாத அறிவைத் துணைக்கொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் 6. வாய்ச்சுவைக்கு முதன்மை தருவோர் வாழ்ந்தால் என்ன? ….தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 7. பகைவராலும் அழிக்க முடியாத அறிவைத் துணைக் கொள்க! அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்கல் ஆகா அரண் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: அறிவுடைமை, குறள் எண்: 421) அறிவு அழிவு வராமல் காக்கும் கருவி. அதுவே பகைவராலும் அழிக்கமுடியாத அரணுமாம் என்கிறார் திருவள்ளுவர். அறிவு யாரிடம் இருக்கின்றதோ அதுவே அவர்களைக் காக்கும் கருவி என மேனாட்டுக் கல்வி அறிவியலாளர்கள் கூறுகின்றனர். கல்வி…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் திருக்குறள் உரைச் சிறப்பு 1/2 : செ. இரவிசங்கர்
பேராசிரியர் சி.இலக்குவனாரின் திருக்குறள் உரைச் சிறப்பு 1/2 முன்னுரை: திருக்குறளுக்கு உரையெழுதிய பலருள் சி.இலக்குவனாரும் ஒருவர். தமிழுக்காகப் பணி செய்த மாபெரும் அறிஞர் இலக்குவனார் என்பதை இரா.நெடுஞ்செழியனாரின் கூற்றின் முலம் அறியலாம். “இலக்குவனாரின் தமிழறிவும்ஆற்றலும், துணிவும், திறமையும், அஞ்சாநெஞ்சமும், அன்புள்ளமும், விடா முயற்சியும், தொண்டு புரியும் சிறப்பும், தமிழுக்காகவும், தமிழர்க்காகவும் பாடுபடும் தன்மையும் பாராட்டிப் போற்றத்தக்கனவாகும்” என்கிறார். இது முற்றிலும் உண்மையாகவே அவரது தமிழ்ப்பணியைப் பார்க்கும்போது தெரிகிறது. இவ்வளவு திறமையும் உழைப்பும் கொண்ட இலக்குவனாரின் பணிகளுள் திருக்குறளுக்கு இயற்றியுள்ள உரைப் பணி போற்றத்தக்கதாகும். …