மனத்தோடும் மணம் பேச வருவானே! – (உ)லோக நாதன்
மனத்தோடும் மணம் பேச வருவானே! மூவாறு வயது தொட்டு யாராரோ பெண் கேட்டார்கள் பெண்ணை மட்டுமல்ல…. பொன்னும் பொருளும் கூட ஊனமுள்ள பெண்ணென்று உயர்ந்து கொண்டே போகிறது வீடு வாசல் சொத்தென்றும் ஊர்திகூட வேண்டுமாம் கைக்கூலியாய்! அழகில் ஓர் குறையில்லை அறிவிலும் ஓர் குறையில்லை அன்பில் கூடக் குறையில்லை அப்புறம் என்ன குறையோ? ஊனம் கேட்டுப் பெற்ற வரமா? கடவுள் கொடுத்த சாபமா? பெற்றோரின் பாவமா?-அது துய்ப்போரின் பலனா? இயற்கை தந்த பரிசை இழித்துரைக்கும் இனமே இதயம் தொட்டுச் சொல்லுங்கள் உங்கள் பிள்ளை இப்படி இருந்தால்…..!!??…