(தமிழ்ச்சொல்லாக்கம்: 342 – 344 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 345 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)  345. கலியாண சுந்தரம் – மணவழகு 1917இல் திசம்பர் மாதம் 24உ செம்பியத்தில் கூடிய மகாசமாசக் கூட்டத்தில் நடந்த தீர்மானங்கள். 1. இவ்வருடத்து அறிக்கைப் பத்திரம் அங்கீகரிக்கப்பட்டது. 2. சிரீமான் – கி – குப்புச்சாமி முதலியார் அவர்கள் ஐந்து வருடமாகப் புரிந்த உதவிக்காக சமாசம் நன்றி பாராட்டுகின்றது. சபைத்தலைவர்            :           சித்தாந்த சரபம் – அட்டாவதானம் சிவபிரீ – கலியாண கந்தர யதீந்திர சுவாமிகள், சென்னை உதவி…