தோழர் தியாகு எழுதுகிறார் 189 : மணிப்பூர் வன்முறையை நிறுத்துக!
(தோழர் தியாகு எழுதுகிறார் 188 : செவ்வணக்கம் தோழர் (இ)லிங்கன்! -தொடர்ச்சி) மணிப்பூர் வன்முறையை நிறுத்துக! இனிய அன்பர்களே! மணிப்பூர் வன்முறை இன்னும் ஓயவில்லை. ஓயவிடப்பட வில்லை. இந்த வன்முறை தொடங்கியதிலும் தொடர்வதிலும் பாரதிய சனதாக் கட்சிக்கும், இந்திய ஒன்றிய அரசுக்கும், மணிப்பூர் மாநில அரசுக்கும், மணிப்பூர் நீதிமன்றத்துக்கும் முகன்மைப் பங்கு உண்டு. இதற்கான சில சான்றுகளை நாளை வெளியிடுகிறேன். இந்த வன்முறையை நிறுத்தக் கோரும் வேண்டுகோளை அறிஞர் இராம் புனியானி எனக்கு அனுப்பி வைத்து என்னையும் வழிமொழியச் சொல்லிக் கேட்டிருந்தார். இது பொறுப்புடன்…