மணிமுடி நோய்மியே! அழித்திடு தீயரை!   ‘கொரோனா‘ வருதோ இல்லையோ கொஞ்சம் ஓய்வெடுக்கிறது கொள்ளி வாய்கள் அறிக்கை சொல்லாமல் அடக்கி ஆள்கிறது வாய்க்கவசம்   தூணிலும் துரும்பிலும் தூங்கும் கடவுள் தூங்கிக்கொண்டே தூதுவர்கள் தொல்லையின்றி   கொள்ளையர்களைக் கொண்டு போகட்டும் கொள்ளை நோய்   ஏழை உழைப்பாளியை ஏதூம் தீண்டுவதில்லை தீது நினையாதவனை யாதூம் நுகர்வதில்லை   ‘கொரோனாவே’ வருக. கொடியவர்கள் மடிய   துரோகிகளைத் தூக்கிலிடாது தூங்கும் மன்றம் தூசியாய் வந்து நீ தூக்கிலிடு   இல்லாத கடவுள் பெயரில் நில்லாத வன்முறை…