மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன்! ~ இ.பு.ஞானப்பிரகாசன்
[‘மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்’ எனும் இறையுணர்வுப் பாடலைத் தமிழுணர்வுப் பாடலாய் மாற்றி இந்த ‘மாவீரர் திருநா’ளில் என் தமிழஞ்சலியாய்ச் சாற்றுகிறேன்!] பல்லவி மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் – ஒரு மரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன் – நான் மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் – ஒரு மரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன் கல்லானாலும் துயிலும் இல்லக் கல்லாவேன் – கருங் கல்லானாலும் துயிலும் இல்லக் கல்லாவேன் – பசும் புல்லானாலும் கரிகாலன் கை வில்லாவேன் – நான் மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் – ஒரு மரமானாலும்…