விட்ணுபுரம் விருது 2017
விட்ணுபுரம் விருது 2017 2017 ஆம் ஆண்டுக்கான விட்ணுபுரம் விருது மலேசிய எழுத்தாளரான சீ.முத்துசாமிக்கு வழங்கப்படுகிறது. கோவையில் மார்கழி 01, 02 / திசம்பர் 16,17 ஆம் நாள்களில் விட்ணுபுரம் விருது வழங்கும் விழாவும் வாசகர்கூடலும் நிகழவிருக்கிறது. 16 அன்று காலை ஒன்பது மணிக்குச் சந்திப்புகள் தொடங்கும். இரவு பதினொரு மணிவரை எழுத்தாளர்களுடன் உரையாடல்கள் நிகழும். 17 அன்று காலை 9 மணிக்கு மீண்டும் தொடங்கி மாலை நான்குமணிக்கு முடிவடையும். மாலை ஆறுமணிக்குப் பொது நிகழ்ச்சியில் விருது வழங்கப்படும். சீ.முத்துசாமி மலேசியாவின் மூத்தப்படைப்பாளிகளில் தனித்துவமானவர். தொடர்ந்து தோட்டத்தைக் களமாக…