மண்ணினையும் மாண்பினையும் காக்க வேண்டும்! – தாமோதரன் கபாலி
மண்ணினையும் மாண்பினையும் காக்க வேண்டும்! உண்பதுவும் உறங்குவதும் வாழ்க்கை யல்ல! உடமைகளும் உரிமைகளும் இழக்க வல்ல! உண்மைகளும் உணர்வுகளும் சாக வல்ல! உள்ளொளியும் உயிரினையும் போக்க வல்ல! பண்ணிசையும் பாத்தமிழாய் வாழ வேண்டும்! பரிவோடும் பண்போடும் நோக்க வேண்டும்! மண்ணினையும் மாண்பினையும் காக்க வேண்டும்! மாசற்ற வாழ்வினையே போற்ற வேண்டும்! – தாமோதரன் கபாலி
“களவு போகும் நம் மண்ணும் மனிதமும் ” – சூழலியல் கருத்தரங்கம்
புரட்டாசி 10, 2046/ செப்.27, 2015 மாலை 5.30 மேற்குத் தாம்பரம் “களவு போகும் நம் மண்ணும் மனிதமும் ” – சூழலியல் கருத்தரங்கம் இன்று தொடர்ச்சியாகச் சுரண்டப்பட்டு வரும் இயற்கை வளங்கள் குறித்து நாம் அறிந்தும் கவனம் செலுத்தாமலே இருக்கின்றோம். நாம், நமது அருகில் அன்றாடம் மணல் கொள்ளையால் சுரண்டப்பட்டும், வன்கவர்வுகளால், கொட்டப்படும் கழிவுகளால் மாசுபட்டும் வருகின்ற நீர் நிலைகளைப்பற்றிக் கவனத்தில் கொள்ள மறுக்கின்றோம். பணம் இருந்தால்தான் தண்ணீர்!, அதுவும் தூய்மையான நீரைப் பெற இயலாத நிலை! தொடர்ச்சியாகக் குறைந்துகொண்டு வரும்…