துலுக்கப்பயலே! 2 -வைகை அனிசு
சன்னி-சியாக்கள்: உலகளவில் முசுலிம்கள், சன்னி, சியாக்கள் என இரு முதன்மைப் பிரிவுகளாக உள்ளனர். திருக்குர்ஆன், அகதீசு(ḥadīth , முகமது நபியின் கருத்துகள் ஆகிய வழிகாட்டலைப் பின்பற்றுபவர்கள் சன்னி முசுலிம்கள் எனவும், முகமது நபியின் மருமகன் இமாம் அலி மற்றும் தம் மரபினர்களின் அகதீசுகளோடு இசுலாத்தைப் பின்பற்றுபவர்கள் சியாக்கள் எனவும் உள்ளனர். தமிழகத்தில் முசுலிம்கள்: தமிழகத்தில் உள்ள முசுலிம்கள். நிலங்களுக்கு தகுந்தவாறுத் தொழிலைச் செய்தனர். அந்தத் தொழிலை அடிப்படையாக வைத்து அவர்களுக்கு அடைமொழி வைக்கப்பட்டு அடையாளப்படுத்தினார்கள். இராவுத்தர், (இ)லெப்பை, மரக்காயர்,ஓசா எனத் தாங்கள் செய்த…
துலுக்கப்பயலே! – 1: வைகை அனிசு
பள்ளிப்பருவத்தில் தொடங்கிக் கல்லூரிப்பருவம் வரை என் ஆழ்மனத்தில் தீண்டத்தகாத சொல்லாக இருந்த சொல் ‘துலுக்கப்பயல்’ என்பது. இப்பொழுது நான் பத்திரிக்கைத்துறையில் பணிபுரிந்தாலும் பணித்தோழர்களும் உற்ற நண்பர்களும் நான் இல்லாத இடத்தில் “அந்தத் துலுக்கனை இன்னும் காணோம்” என்று அடையாளப்படுத்தி வருவதை இன்றளவும் கண்டுவருகிறேன். சிறு பருவத்திலேயே இதற்கு விடைகாணும் பொருட்டாக என்னுடைய பாட்டனாரிடம் “முசுலிம்களை ஏன் துலுக்கன் என அழைக்கிறார்கள்” என அடிக்கடிக் கேள்வி கேட்பேன். அவர், விடுதலைப் போராட்ட ஈகையாளி(தியாகி) என்ற முறையில் ஊர், ஊராகச் சென்றவர் என்பதால் துலுக்கக் கவுண்டர்,…