ஐரோப்பியப் பண்டுவ மருத்துவக் கழகத்தின் மதிப்புமிகு உறுப்பினர் வீரப்பன்

   ஐரோப்பியப் பண்டுவ மருத்துவக் கழகம்(European Society of Intensive Care Medicine)  மரு. சிதம்பரம் வீரப்பன் அவர்களுக்கு  மதிப்புமிகு உறுப்பினர் (Honorary Member) எனும் விருதை நிகழாண்டு புரட்டாசி 11-15, 2045 / செப். 27 – அக்.1 நாள்களில் பார்சலோனா நகரில்  நிகழ்ந்த 27-ஆம் அனைத்துலக மாநாட்டில்,  வழங்கியது.  இதுகாறும் பதின்மூவருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இவ்விருது, 4 ஆண்டுகள் கழித்து வழங்கப்பெறுவதும், இவ்விருதை வாங்கும் முதல் ஆசியர், இந்தியர், தமிழர் இவர்தாம் என்பதும் இச்சிறப்பைக்கூட்டுவன.   இக்கழகம் 7000 உறுப்பினர்களைக் கொண்டது;…

ஐரோப்பிய பண்டுவ மருத்துவக் கழகத்தின் விருது பெறும் முதல் ஆசியர் – தமிழர் மரு. வீரப்பன்

விருதாளர் மரு.சி.வீரப்பனைப் பாராட்டிய பொறி.இ.திருவேலன் அறிமுக உரை!   தலைமை விருந்தினர் மாண்பமை நீதிபதி இராசேசுவரன் அவர்களே! சுழற்கழக மாவட்டம் 3230-இன் மேனாள் ஆளுநரும், இந்நாள் உறுப்பினர் சேர்க்கைக் குழுவின் அறிவுரைஞருமான, சிறப்பு விருந்தினர், சுழலர்(ரோட்டேரியன்) ஏ.பி. கண்ணா அவர்களே! இவ்விழாவை நடத்தும் தலைவர் திரு கணேசன், செயலாளர் திரு வெங்கடேசன், திரு இராமநாதன், திரு இளங்கோ, பிற பொறுப்பாளர்களே!! எனது கெழுதகை நண்பரான, மருத்துவத்துறையில் சீர்மையாளர் (Vocational Excellence Award) என விருது பெறவிருக்கும் தகைமையாளர் மருத்துவமணி சிதம்பரம் வீரப்பன் அவர்களே! அவர்கள்தம்…