முனைவர் இரெ. குமரனின் பிற நூலறிவையும் தரும் திருக்குறள்-சிறப்புரை : முனைவர் பா.சம்புலிங்கம்

திருக்குறள்–சிறப்புரை : முனைவர் இரெ. குமரன் முனைவர் இரெ.குமரன் எழுதியுள்ள திருக்குறள்-சிறப்புரை என்னும் நூல் இலக்கியப்பொருளின் நோக்கில் உரையைக் கொண்டுள்ள நூலாகும். குறளின் வரிகளுக்கேற்ற வகையில் பொருண்மைக்கேற்றவாறு பிற தமிழ் இலக்கிய நூல்களிலிருந்து மேற்கோளுடன் புரிந்துகொள்ளும் வகையில் எளிய உரையுடன் 1330 குறளையும் ஆராய்ந்து எழுதியுள்ள விதம் பாராட்டத்தக்கதாகும். அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உரைகள் தரப்பட்டுள்ளன. நூலின் இறுதியில் மேற்கோள் நூல்கள், குறள் முதற் குறிப்பு அகர நிரல் ஆகியவை இடம்பெற்றுள்ளன. “திருக்குறள் சிறப்புரை என்றது, திருக்குறளின்…

‘தந்தையுமான தாய் நூல்’ ஆய்வுரை -வா.மு.சே.திருவள்ளுவர்

கவிஞர் நிலவு முத்துக்கிருட்டிணன் அவர்களின் தந்தையுமான தாய் நூல் ஆய்வுரை   சென்னையில் சித்திரை 19, 2046 / 2-5-2015 அன்று கவிஞர் நிலவு முத்துக்கிருட்டிணன் அவர்களின் ‘தந்தையுமான தாய்’ நூல் வெளீயீட்டு விழாவில்    தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளூவர் ஆற்றிய      நூல் ஆய்வுரை: நிலவு முத்துகிருட்டிணன் என் உள்ளம் கவர்ந்த நண்பர். உள்ளதை உணர்வதை கள்ளமில்லாமல் கூறும் நெஞ்சர். தம் குழந்தைப் பருவம் முதல் இன்றுவரை பகுத்தறிவு போற்றும் பாவலர். சமுகம் சுற்றத்தார் நண்பர் குடும்பம் என அனைத்து நிலைகளிலும் செயலாற்றும்…

வெ.அரங்கராசனின் குறள்பொருள் நகைச்சுவை – குமரிச்செழியனின் நயவுரை

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திருவள்ளுவர் ஆண்டு சித்திரைத் திங்கள் 5 [18–-04—2015] அன்று திருக்குறள் எழுச்சி மாநாடு நடைபெற்றது.      அங்குத் தமிழ்மாமணி பேராசிரியர் முனைவர் பா. வளன் அரசு அவர்களின் தலைமையில் திருக்குறள் தூயர் மிகச்சிறந்த திருக்குறள் நுண்ணாய்வாளர் பேராசிரியர் முனைவர் கு. மோகனராசு நல்வாழ்த்துகளுடன் பேராசிரியர் வெ. அரங்கராசன் எழுதிய குறள் பொருள் நகைச்சுவை என்னும் நூல் வெளியிடப்பட்டது.      நூலை வெளியிட்டவர் சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றும் இணைப்பேராசிரியர் முனைவர் முகிலை இராசபாண்டியன். முதல் படியைப் பெற்றுக்கொண்டவர் திருக்குறள் தூதர் சு. நடராசன். அந்நூலில் இடம்…