முதல்வர் பதவி விலகத், தடையை மீறி நாளை (21.8.)ஆர்ப்பாட்டம் . வைகோ
முதல்வர் பதவி விலகத் தடையை மீறி நாளை (21.8.)ஆர்ப்பாட்டம் . வைகோ முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வலியுறுத்தி நாளை (21.8.17) சென்னையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேகதாதுவில் கருநாடக அரசு அணை கட்டுவதற்கு எந்த மறுப்பையும் தெரிவிக்காத தமிழக அரசைக் கண்டித்தும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வலியுறுத்தியும் நாளை மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வைகோ அறிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் இசைவு வழங்கவில்லை…
தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி- த.மா.கா. சார்பில் திருச்சியில் மாபெரும் மாநாடு
தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி – த.மா.கா. சார்பில் திருச்சியில் மாபெரும் மாநாடு 6 கட்சித் தலைவர்கள் உரையாற்றினர். மக்கள் நலக்கூட்டணி: நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி-த.மா.கா. சார்பில் அமைக்கப்பெற்ற கூட்டணி 234 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றது. வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கூட்டணியின் முதல்- அமைச்சர் வேட்பாளரும், தே.மு.தி.க. நிறுவனத் தலைவருமான விசயகாந்து, தலைமையில் மாநாடு நடைபெற்றது. ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ, மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயலாளர் இராமகிருட்டிணன், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச்…
தமிழக அரசின் ஆங்கிலவழித் திணிப்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்
தமிழ்நாடெங்கும், தமிழக அரசின் ஆங்கிலவழித் திணிப்பிற்கு எதிராகப்போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. இவைபோல் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் பள்ளிக்கல்வி அமைச்சர் வீடு முற்றுகைப் போராட்டம் நடத்தப்பெற்றது. பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 400 ஆக்கும் மேற்பட்டோர் தளையிடப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர். வைகாசி 14, 2045, மே 28, 2014 அன்று காலை 10 மணியளவில் நடைபெற்ற போராட்டத்திற்கு, தோழர் பெ.மணியரசன் தலைமை ஏற்க பல்வேறு காட்சித்தொடர்பியல் தலைவர்கள் பங்கேற்றனர். தமிழ்த்தேச மக்கள் கட்சி சார்பில் பொது செயலாளர் தமிழ்நேயன், அமைப்புச் செயலாளர், செந்தமிழ்க்குமரன்…
வாக்கு யாருக்கு?
யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விட யாருக்கு வாக்களிக்கக்கூடாது என்பதன் அடிப்படையில்தான் தேர்தல் வெற்றிகள் அமைகின்றன. மக்கள் மனம் கொள்ளும் வகையில் எக்கட்சியின் பணியும் அமையாததால், விருப்பமின்றி, எதிர்நிலை அணுகுமுறையில் மக்கள் வாக்களிக்கின்றனர். சிலக் கட்சிகள் மீது நாட்டம் இருப்பினும் வாக்கு சிதறக்கூடாது என்று எண்ணியும் வெற்றிபெறும் என எதிர்நோக்கும் கட்சியில் வாக்களிக்க விரும்பியும், மக்கள் அளிக்கும் வாக்குகளே ஆட்சியை முடிவு செய்கின்றன. இப்பொழுது நடைபெற்று வரும் பொதுத்தேர்தலில் – தமிழ்நாட்டில் வரும் ஏப்பிரல் 24,2014 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள…