அரங்கனின் குறள் ஒளி : 7 : துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 4/4
துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 4/4:பேராசிரியர் வெ.அரங்கராசன் விளக்க உரை: பேராசிரியர் வெ.அரங்கராசன் 1031ஆவது குறள் உழவின் இன்றியமையாமையை உரைக்கின்றது. இதில் உள்ள ஈற்றுச் சீர் தலை என்பதுதான் உழவின் இன்றியமையாமையை மிகத் தெளிவாக இயம்புகின்றது. அஃதாவது, உடலுக்குத் தலை எத்துணை அளவு இன்றியமையாமையாதது என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை; தலை உள்ளவர்கள் அனைவரும் நன்குணர்வர். அதுபோலவே, உலகம் என்னும் உடலுக்குத் தலையாக அமைவது உயிர் கொடுக்கும் உயர்தொழில் உழவே; உயிர்த்தொழிலாம். உலகம் சார்ந்தது: அகச்சான்று: சுழன்றும் ஏர்ப்பின்ன[து] உலகம்;…