கொடைக்கானல் பாதை சீரமைக்கும் பணி மந்தம்   தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே உள்ள டம்டம்பாறை பகுதியில் கடந்த இரண்டு நாளுக்கு முன்னர்ப் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பாறைச் சரிவுகள் ஏற்பட்டன.   காட்டாற்று வெள்ளம், இயற்கையான மழைநீர் ஊற்றுகள், அருவிகளில் இருந்து வந்த தண்ணீர் கொடைக்கானல் செல்லும் சாலையை அரித்தும், சாலைகளில் கற்கள் குவியலாகவும் காட்சியளித்தது. சில இடங்களில் சாலைகள் அடியோடு துண்டிக்கப்பட்டது. இதனால் பூலத்தூர், கொடைக்கானல், கவுஞ்சி,பூம்பாறை போன்ற இடங்களுக்குச் சென்றவர்கள் கடும் அவதிப்பட்டனர். இதற்காக மாற்று வழி ஏற்படுத்தப்பட்டது….