மனத்தில் பதிந்தவர்கள் : பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் – ஏர்வாடி இராதாகிருட்டிணன்     பாவேந்தருடன் பழகுதற்கியலாத வாய்ப்பை உடன்பிறப்பு மன்னர்மன்னனுடனும் எழுத்தாளர் தமிழ்வாணனுடன் கிடைக்காத தொடர்பைச் உடன்பிறப்புகள் லேனா, இரவி தமிழ்வாணன் ஆகியோரிடமும், இசைமேதை சீர்காழியுடன் பெறாத தோழமைப் பேற்றினைத் தம்பி மரு.சிவசிதம்பரத்திடமும் பெற்றதைப் போல மூத்த தமிழறிஞர் மறைந்த பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்களுடன் பழகக் கிடைக்காத குறையை இறைவன் எனக்குப் பேராசிரியர் மறைமலையுடனான நட்பில் அருளியிருக்கிறான் என்கிற நிறைவு என் நெஞ்சில் நிரம்பவுண்டு.   பேராசிரியர் மறைமலை அவர்களைப்ப்றறி…