ஈழப்படுகொலைகள் தொடர்பில் சான்றுகள் அளிப்பதற்கான ஐ.நாவின் கேள்விப் படிவங்கள்
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வல்லுநர் குழுவினர் உசாவல்களைத் தொடங்கி விட்டனர். அதற்கான, சான்றுரைகளைத் திரட்டுவதற்கான கேள்விக்கொத்து, அக்கேள்விக் கொத்துகளை உள்ளடக்கிய மாதிரிப் படிவம் கீழே தரப்பட்டுள்ளன. மனித உரிமை மீறல்களை ஐ.நா மனித உரிமை ஆணையகம் 12 வகையாக வகைப்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழரும் தங்களுக்கு எந்த வகை பொருந்துகின்றதோ அப்படிவத்தைப் பூர்த்தி செய்து ஐக்கிய நாடுகள் சபையின் மின்னஞ்சல் முகவரிக்கோ ஐக்கிய நாடுகள் சபையின் அஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம்….
அமெரிக்கத் தீர்மானம் அமுது தடவிய நஞ்சு – வைகோ குற்றச்சாட்டு
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் அமெரிக்கத் தீர்மானத்தை அமுது தடவிய நஞ்சு எனக் கடிந்துரைத்துள்ளார். அமெரிக்கா, பிரித்தானியம், மாண்டிநிரோ, மாசிடோனியா, மொரீசியசு ஆகிய ஐந்து நாடுகள் மனித உரிமைக் குழுவில் மார்ச்சு 3 அன்று ஒரு தீர்மானத்தை அளித்துள்ளன. அமெரிக்க அரசு முன்நின்று தயாரித்துள்ள இத்தீர்மானம் மிகவும் வஞ்சகமானது. வரிக்கு வரி திரும்பத் திரும்பப் படித்து அதிர்ச்சியுற்றேன். சிங்கள அரசுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்து விட்டதாகவும், ஆனாலும் அதை அலட்சியப்படுத்துகிறோம் என்று சிங்கள அரசு கூறுவது, தமிழர்களுக்கான நீதியை…