அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 4 இ. விளைவு
(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 3. ஆ. செல்வம்-தொடர்ச்சி) அறிவியல் திருவள்ளுவம் இ. விளைவு ‘விளைவு’ என்பதற்குப் ‘பயன்படுவதற்கு உண்டாதல்’ என்று பொருள். விளைவயின் மாண்டற் கரிதாம் பயன்’ {177) என்று திருவள்ளுவர் விளைவைப் பயனாகக் குறித்தார். “விளைவின் கண் வீயா விழுமம் தரும்” (284) என்றதிலும் விளைவு கெடாத பயனைக் குறிக்கும். பயன்பட உண்டாகும் பொருள் கண்ணாற் காணப்படும் பருப் பொருளாகவும் இருக்கலாம்; நுண்பொருளாகவும் இருக்க லாம்; கருத்துப் பொருளாகவும் இருக்கலாம். ‘வயல் விளைவு நன்றாக இருந்தது’-இதில் விளைவு பருப்பொருளாகிய நெல்லைக் குறிக்கும்….
மாண்பிலா மடமை ஆக்குநூல் மனுநூல் ! – பழ.தமிழாளன்
மாண்பிலா மடமை ஆக்குநூல் மனுநூல் ! 1. நெற்றியிலே பெண்குறியும் நிலைபெற்ற(து) உண்டோ ? நெற்றிதனில் பிறந்தவராம் பிராமணர்கள் என்பார் உற்றதொரு பெண்குறியும் தோளதனில் உண்டோ ? உலகாள்வோர் பிறந்தகுறி அக்குறியே என்பார் பெற்றதொடை பெண்குறியும் பிறங்குவதும் உண்டோ ? பொருள்வணிகர் தோன்றுகுறி அதுதானாம் என்பார்.// நிற்கின்ற தாளதனில் பெண்குறியும் உண்டோ ? நிறையுழைப்புச் சூத்திரர்கள் பிறந்த குறி என்பார் ! 2. பிறக்குமிடப் பெண்குறிகள் பிறந்தவிடம் நான்காய் பேதமையை விளைவிக்கும் மனுநூலின் கூற்றை அறவுணர்வு பெற்றிருக்கும் …
அகரமுதல முறைமன்றம்: ஆ.இராசா குற்றவாளியே!
அகரமுதல முறைமன்றம்: ஆ.இராசா குற்றவாளியே! – இலக்குவனார் திருவள்ளுவன் தி.மு.க.நாடாளுமன்ற உறுப்பினான முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.இராசா, இந்துக்கள் அனைவரையும் இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளார் எனப் பிராமணியன் என்பார் முறையிட்டுள்ளார். அவர், ஆ.இராசா, சென்னை பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், “இந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன். இந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். இந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ பரத்தையின்(விபச்சாரியின்) மகன். எத்தனை பேர் பரத்தையின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? . . எத்தனை பேர்…
அறநூலல்ல மனுநூல் – சமற்கிருத அரங்கம் 3 : 21.03.2021
மனுநூலுக்கும் குறள் நூலுக்கும் அடிப்படை வேறுபாடுகள் நிறைய உள்ளன – க.த.திருநாவுக்கரசு
மனுநூலுக்கும் குறள் நூலுக்கும் அடிப்படை வேறுபாடுகள் நிறைய உள்ளன “தனது உயிரைக் காக்கவும் தன்னைச் சார்ந்தவர்கள் உயிரைக் காக்கவும் வன்முறைச் செயல்களில் ஒருவன் ஈடுபடலாம்” (8: 347350) எனவும், மூன்று நாள்கள் பட்டினி கிடப்பவன் மறுநாளைக்கும் அதே நிலைதான் என்பதை அறிந்தால், அவன் திருடலாம்” (11:16) எனவும் மனுஉரிமை அளிக்கின்றார். ஆனால், திருவள்ளுவரோ, “தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல்?’ என வினவுவதோடு நிற்காமல், “ஈன்றாள் பசி காண்பான் ஆயினும்செய்யற்க. சான்றோர் பழிக்கும் வினை’ என அறிவுறுத்துகின்றார். இத்தகைய அடிப்படைக் கொள்கை…