வள்ளுவர் சொல்லமுதம் -4 : அ. க. நவநீத கிருட்டிணன் : மனையும் மக்களும்.2
(வள்ளுவர் சொல்லமுதம் -3 : அ. க. நவநீத கிருட்டிணன் : மனையும் மக்களும் – தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம் : மனையும் மக்களும்.2 “கடவுட் கற்பொடு குடிக்குவிளக் காகிய புதல்வர்ப் பயந்த புகழ் மிகு சிறப்பின்‘” என்பது அகப்பாடல். அன்பினுக் காகவே வாழ்பவரார்?-அன்பில் ஆருயிர் போக்கத் துணிபவரார்? இன்ப உரைகள் தருபவரார்?-வீட்டை இன்னகை யால்ஒளி,செய்பவரார்? எல்லாம் பெண்கள் அன்றோ! அவர்தம் பங்கயக் கைகளின் நலத்தை நோக்கியன்றோ பாரில் அறங்கள் வளர்கின்றன. பிச்சை கேட்பவனும், “அம்மா ! பிச்சை”‘ என்றுதானே கேட்கின்றான். ஆதலின் இவ்…