வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 7.
(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 6. தொடர்ச்சி) வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை ங. களவியல் (வரிசை எண்கள் / எழுத்துகள் ‘ங’கரத்திலிருந்து குறிக்கப் பெறுகின்றன.) சிறைகாக்கும் காப்பு எவன்செய்யும்; மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை (57) மகளிர் சிறை காக்கும்=மகளிரைச் சிறையில் வைத்துக் காப்பாற்றும். காப்பு=காவல். எவன் செய்யும்=என்ன செய்யும்? நிறைகாக்கும்=மகளிர் தமது உள்ளத்தை அறத்தின் கண் நிறுத்தும் தன்மையால், காக்கும்=காப்பாற்றும். காப்பே= காவலே, தலை=தலையானது. உலகெங்கணும் ஆண் பெண் உறவு…
வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 6.
(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 5. தொடர்ச்சி) வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை ங. களவியல் (வரிசை எண்கள் / எழுத்துகள் ‘ங’கரத்திலிருந்து குறிக்கப் பெறுகின்றன.) பெண்ணின் பெருந்தக்க யாவுள? கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின் (54) பெண்ணின்=மனைவியைவிட,பெருந்தக்க=பெருமை மிக்கவை, யாவுள=எவை உண்டு, கற்பு என்னும்=கற்பு என்று சொல்லப்படும், திண்மை=கலங்கா நிலைமை, உண்டாகப் பெறின்=இருக்கப்பெறுமானால். நல்வாழ்க்கைக்குத் துணையாய் இருக்கக் கூடியவள் மனைவியேயாவாள். அவள் தான் கொண்ட கணவனிடம் நீங்காத அன்புடையவளாய் இருத்தல் வேண்டும்….
அகத் துறைகளில் தலைமையதிகாரமுடையார் பெண்டிர் – நாவலர் பாரதியார்
மனைமாண்பு சிறக்குமாறு அகத் துறைகளில் தலைமையதிகாரமுடையார் பெண்டிர் என்பதும், “மனைவி”, “இல்லாள்”, என்னுந் தொல்லைத் தமிழ் மொழிகளுக்கும் நேரான ஆண்பால் வழக்கின்மையொன்றே விளக்கும் மனைமாட்சிக் குரியாள் – இல்லத் துறைகளிலிறைமைக் குரியாள் என்னும் பொருள்பட, “மனைவி”, “இல்லாள்”, என வழங்குத் தமிழ்ச் சொற்களுக்குச் சரியாய், “மனைவன்”, “இல்லான்” என வழக்குமுறை கிடையாது; இப் பொருளி லாண்பாலொரு சொல் வழக்கின்மை நோக்கின் அவ்வுரிமை மகளிர்க்கே சிறப்பாதலும் ஆடவர்க்கதிலொப்புரிமை கூட இன்மையுமே தமிழர் முது வழக்காதலானிவ்வாறு சொற்களமைந்துள்ளன வென்பதன்றிப் பிறிது காரணங் காண்பதரிது. –நாவலர் சோமசுந்தரபாரதியார்:…
திருக்குறளில் உருவகம் 4 – பேராசிரியர் வீ.ஒப்பிலி
(பங்குனி 16, தி.ஆ.2045 / 30, மார்ச்சு 2014 இதழின் தொடர்ச்சி)