(அதிகாரம் 069. தூது தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 070. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் ஆட்சியரிடம் பழகும் பொழுது  கடைப்பிடிக்க  வேண்டிய  முறைகள்.   அகலா(து), அணுகாது, தீக்காய்வார் போல்க,      இகல்வேந்தர் சேர்ந்(து)ஒழுகு வார்.         மாறுபட்டு ஆள்வாரோடு விலகாமல்,         நெருங்காமல் ஆய்ந்து பழகு.   மன்னர் விழைய விழையாமை, மன்னரால்      மன்னிய ஆக்கம் தரும்.      ஆட்சியார் விரும்புவதை விரும்பாமை,         நிலைக்கும் நன்மைகள் தரும்.     போற்றின், அரியவை போற்றல்; கடுத்தபின்,      தேற்றுதல்…