‘இலெமுரியா அறக்கட்டளை’ யின் முப்பெரு விழா, மும்பை
‘இலெமுரியா அறக்கட்டளை’ யின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் முப்பெரு விழா எதிர்வரும் ஆடி 07, 2048 / 23/7/2017 ஞாயிறு காலை 9.30 மணிக்கு மும்பை சிவாசி பூங்காவிலுள்ள வீர்சாவர்க்கர் அரங்கில் நடைபெற உள்ளது. தமிழ், தமிழர் நலன், பண்பாட்டு விழுமியங்களின் தொடர்ச்சி ஆகியவற்றை முன்னிறுத்தி நிகழ்த்தப்படும் விழாவாகும் இது. சேது.சொக்கலிங்கம் இ.ஆ.ப. தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் அறிவியலறிஞர் மயில்சாமி அண்ணாதுரை முதன்மை விருந்தினராகக் கலந்து கொள்கிறார். விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டுகிறேன். குமணராசன்.
தாய்த்தமிழ்ப்பள்ளிகள், திருப்பூர், முப்பெருவிழா
தை 24, 2047 / பிப். 07, 2016 தாய்த்தமிழ்க்கல்விப்பணி அறக்கட்டளை
133 பறையிசைக்கத் திருவள்ளுவர் சிலை திறப்பு, திருப்பூர்
தை 24, 2047 / பிப்பிரவரி 07, 2016
மணவை முசுதபா 80 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
அறிவியல்தமிழறிஞர் திரு. மணவை முசுதபா அவர்களின் 80 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா வருகிற ஞாயிற்றுக்கிழமை வைகாசி 31, 2046 / சூன் 14, 2015 மாலை சென்னையில் இராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள இந்திய அலுவலர் சங்ககக்கட்டடத்தில் மாலை 5.00 மணிமுதல் இரவு 8.30 மணி வரை நடைபெறவுள்ளது. தேநீர் விருந்துடன் தொடங்கும் விழா, இரவு விருந்துடன் நிறைவடைகிறது. அந்நிகழ்வின் பொழுது அறிவியல் தமிழ் அறக்கட்டளை அமைப்பினை அதிகாரப்பூர்வமாக திறந்துவைக்க விண்ணியல் அறிவியல் துறையில் அருந்திறல் ஆற்றியுள்ள மதிற்பிற்குரிய முனைவர்…