தமிழர்களை ஒட்டு மொத்தமாக ஏமாற்றுகிறார் செயலலிதா : கடலூரில் கருணாநிதி பேச்சு
கடலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர்நந்தகோபாலக் கிருட்டிணனை ஆதரித்து கடலூரில் திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது: தமிழக முதலமைச்சராக இருக்கிற அம்மையார் செயலலிதா, ஏதோ தமிழ்நாட்டு மக்களுக்காக அவர்தான் கவலைப் படுவதை போலவும் நமக்கெல்லாம் தமிழ்நாட்டு மக்களை பற்றிக் கவலை கிடையாது போலவும் பேசி வருகிறார். தி.மு.க வின் ஈடுபாடு தமிழ்ச்சமுதாயத்தை வாழவைக்க வேண்டும் என்பது ஒன்றுதான். செயலலிதா நம்மை எல்லாம் எந்த அளவிற்கு அவதிக்கு ஆளாக்கியுள்ளார் என்பதை நான் சொல்லாமலேயே பட்டறிவு மூலம் தெரிந்துவைத்திருக்கிறீர்கள். வருகின்ற வழியெல்லாம் சிற்றூர்கள் தோறும்…