ஏழுதமிழர் விடுதலை – நூல் வெளியீடு – கருத்தரங்கம்!
“ஏழுதமிழர் விடுதலை – உச்சநீதிமன்ற மறுப்பு – தமிழ்நாடு அரசு அதிகாரம்” – நூல் வெளியீடு மற்றும் கருத்தரங்கம்! தமிழீழத்திற்கு இந்திய அமைதிப்படையை அனுப்பி, ஆயிரக்கணக்கானத் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமான முன்னாள் இந்தியத் தலைமையமைச்சர் இராசீவு காந்தி கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புபடுத்தப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி முதலான ஏழு தமிழர்களின் விடுதலை குறித்தும், அதற்கு மறுப்புத் தெரிவித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்தும், தமிழ்நாடு அரசின் அதிகாரங்கள் குறித்தும் சட்ட விளக்கங்களோடு பேசுகின்ற, “ஏழு தமிழர் விடுதலை – உச்ச நீதிமன்ற மறுப்பு – தமிழ்நாடு அரசு அதிகாரம்” – நூலின் வெளியீட்டு…
தூக்குத் தண்டனை நீக்கம்; உலகெங்கும் நீதியின் ஒளி: வைகோ
இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதிமான்கள் சதாசிவம், இரஞ்சன் கோகோய், சிவ் கீர்த்தி(சிங்) ஆகிய மூவர் அமர்வு, 15 பேர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தூக்குத் தண்டனையை நீக்கி, வாணாள் தண்டனையாக அறிவித்து இருக்கின்ற தீர்ப்பு, இந்திய நீதிமன்ற வரலாற்றில் பொன்னேடு ஆகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீரப்பன் கூட்டாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்ட பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம், மீசை மாதையன் ஆகியோருக்கு, 2004 இல், உச்சநீதிமன்றம் தூக்குத்தண்டனையை உறுதி செய்தது. குடியரசுத் தலைவருக்கு…