வேளாண் வாழ்வியல் பயிற்சி
07.06.2045 / 21-6-14 அன்று “செம்மை வனத்தில்” வேளாண் வாழ்வியல் பயிற்சி நடைபெற்றது. செம்மை வன ஒருங்கிணைப்பாளர், மரபுவழி மருத்துவர் ம.செந்தமிழன்பயிற்சி அளித்தார். இயற்கை வழிவேளாண்மை என்றால் என்ன? , வேளாண் வாழ்வியல் கோட்பாடுகள், வாழ்வியல் அறம், ஒருங்கிணைந்த பண்ணையம், கருத்து பகிர்வு உரையாடல், பண்ணை வடிவமைப்புமுறை, செம்மை வலம்வருதல், இயற்கையோடு இணைந்திருத்தல், சந்தைப்படுத்துதல் எனப் பயிற்சி நிகழ்வுகள் சிறப்பாக நடந்தேறியன. இப்பயிற்சியில் எனக்கு அறம் சார்ந்த வாழ்வியலுக்கான ஒரு வடிவம் கிடைத்தது.அதற்கான தத்துவம், கோட்பாடுகள் என என் எண்ணங்களை நெறி செய்து கொண்டதில்பெரும்…