வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தையுடன் மரங்கள் வெட்டிக் கடத்தல்
வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தையுடன் மரங்கள் வெட்டிக் கடத்தல் தேனிமாவட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தையுடன் மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டு வருகின்றன. தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை, நாகர்வள்ளி அணை, பச்சிலைநாச்சியம்மன் அணை, மஞ்சள் ஆறு பகுதிகளில் வருவாய்த்துறைக்குச் சொந்தமான மரங்கள் உள்ளன. பலா, தேக்கு, புளியமரம், நாவல் மரம் முதலான ஏராளமான மரங்கள் உள்ளன. இம்மரங்கள் வருவாய்த்துறைக்குச் சொந்தமான மரங்கள். மரம் வெட்டிக்கடத்தும் கும்பல் உரிமைப்பகுதிகளில்(பட்டாக்காடுகளில்) மரங்கள் வெட்டுவதாக இசைவு பெற்று வருவாய்த்துறைக்குச் சொந்தமான மரங்களை வெட்டிக்கடத்துகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வருவாய்…