துபாயில் சிறுநீரகப்பாதிப்புற்ற தமிழ்ச்சிறுவனுக்கு மருத்துவப் பொருளுதவி தேவை!
துபாய் மருத்துவமனையில் சிறுநீரகப் பாதிப்பினால் மருத்துவம் பெற்று வரும் தமிழகச் சிறுவன் சிகிச்சைக்கான கட்டணம் செலுத்த முடியாமல் வேலையில்லாமல் தவித்து வரும் தந்தை, உதவிட வேண்டுகோள் துபாய் : துபாய் மருத்துவமனையில் சிறுநீரகப் பாதிப்பினால் தமிழகச் சிறுவன் (இ)ரீகன் பெய்த்து பால் (அகவை 7) பண்டுவம்பெற்று வருகிறார். இவரது மருத்துவக் கட்டணததைச் செலுத்த முடியாமல் வேலையில்லாமல் இருந்து வரும் அவரது தந்தை தவித்து வருகிறார். நல்ல மனம் கொண்டவர்கள் இந்த மருத்துவத்திற்காக உதவிடவேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில்…
புற்றுநோய் போக்க மருத்துவச் செலவு உதவி வேண்டல்
அன்பான நண்பர்களுக்கு! கீழ்க்குறிப்பிடப்படும் பெயர் விபரங்களையுடைய இப்பெண் புற்றுநோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். இவரின் மருத்துவச் செலவுக்கு ஏறத்தாழ எண்ணூறாயிரம் உரூபாய்கள் தேவைப்படுகிறது. அவரின் குடும்பச் சூழ்நிலையால் அவர்களால் அப்பெரிய தொகைப்பணத்தை திரட்ட முடியவில்லை. எம்மைப்போன்ற சில அமைப்புகளின் உதவியுடன் அவர்களின் பெற்றோரால் ஏறத்தாழ ஐந்நூறாயிரம் உரூபாய்கள் தற்சமயம் திரட்டப்பட்டுள்ளது. அப்பெண்ணின் நிலைமை மிகவும் மோசமாகி வருவதால் உடனடியாக மருத்துவம் அளிக்கப்படவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் மேலதிகமாகத் தேவைப்படும் முந்நூறாயிரம் உரூபாய்களை உங்களின் உதவியுடன் துயர் துடைப்போம் குழுமத்தின் ஊடாக…