அவதூறு பரப்புவதை ஆளுநர் கிரண் பேடி நிறுத்துக! – முதல்வர் வி.நாராயணசாமி
சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதை ஆளுநர் கிரண் பேடி நிறுத்துக! புதுச்சேரி: அரசியல்வாதிகள், அதிகாரிகள் குறித்துச் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதைப் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி நிறுத்திக் கொள்ள வேண்டும் என, முதல்வர் வி.நாராயணசாமி எச்சரித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் அவர் ம.சே.கு.(Centac) மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுப் பேசியதாவது: முந்தைய ஆண்டுகளில் மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கு இட ஒதுக்கீட்டு முறை இல்லை. தற்போது இந்த அரசின் விடா முயற்சியால் 50 விழுக்காடு இட…