பெண்கள் உடல்நலம் பேணுவது எப்படி?
பெண்கள் உடல்நலம் பேணுவது எப்படி? பள்ளி மாணவிகளுக்கு மருத்துவர் வழி காட்டுதல் தேவகோட்டை- தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் வளர் இளம் பெண்களுக்கான மருத்துவ அறிவுரைக் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆ.கா.க.(எல்.ஐ.சி.)க் கிளை சார்பாக நடைபெற்றது. இப்பள்ளியில் மாணவிகளுக்கு தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்த விழிப்புணர்வு மருத்துவ அறிவுரை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. வழிகாட்டுதல் முகாமிற்கு வந்தவர்களை ஆசிரியை சாந்தி வரவேற்றார். தேவகோட்டை ஆ.கா.க. கிளையின் மேலாளர் மோகனசுந்தரம் தலைமை தாங்கிப் பேசினார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் முன்னிலை…