மதுவுக்கு அடிமையானோரைத் திருத்தும் ‘மறுமலர்ச்சி’ பெரியசாமி – குள.சண்முகசுந்தரம்
அரியலூர் மாவட்டம் மருதூர் மக்களைக் குடிப்பழக்கத்தில் இருந்து விடுவிப்பதற்காகத் தனி மனிதனாகப் போராடி வருகிறார் மண்டல நன்னடத்தை அலுவலராக இருந்து ஓய்வுபெற்ற பெரியசாமி. செயங்கொண்டம் அருகே இருக்கிறது மருதூர். எந்த முன்னேற்றமும் எட்டிப் பார்க்காத சிற்றூர் இது. கூப்பிடு தொலைவில் முந்திரிக் காடுகள் இருப்பதால் பள்ளிக் சிறுவர்கள் கூட இங்கே மது, சூது என வழிதவறிக் கிடப்பது வெகுஇயல்பான ஒன்று. தான் பிறந்த இந்த ஊரைத் திருத்துவதற்காக ஒன்பது ஆண்டுகளாகப் போராடி வருகிறார் ‘மறுமலர்ச்சி’ பெரியசாமி. “சட்டம்(எம்.ஏ., பி.எல்.,) படித்த எனக்கு…
‘மறுமலர்ச்சி’ இயக்குநர் பாரதிக்கு மறுமலர்ச்சி அளியுங்கள்!
காட்டுமன்னார்கோவில் அருகே வாழ்ந்து மறைந்த வள்ளல் இராசு(படையாட்சி). அவரது வரலாற்றை மையமாக வைத்து ‘மறுமலர்ச்சி’ என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ்நாட்டிற்கு அந்த வரலாற்றை அறியத்தந்தவர் இயக்குநர் பாரதி.. அதன்பிறகு சில திரைப்படங்களை அவர் இயக்கினாலும் கூட மறுமலர்ச்சி எட்டிய வெற்றியை அவற்றால் எட்ட முடியவில்லை.. தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ள முதல் திரைப்படம் “தில்லானா மோகனாம்பாள்” அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது “மறுமலர்ச்சி” இதுவே இத்திரைப்படத்தின் சிறப்பை வெளிப்படுத்தும். இயக்குநர் பாரதி இதுவரை தான் சம்பாதித்த எதையுமே தனக்கென்று சேர்த்துக்கொள்ளாமல் ஏழை…