மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் – “வாயுள நாவுள’’ – மறை. திருநாவுக்கரசு
மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் “வாயுள நாவுள’’ தண்டலம் முதலியாரிடம் ‘கற்றுக் கொள்வன வாயுள நாவுள’’ விளக்கம் தண்டலம் முதலியார் என்றது தண்டலம் பாலசுந்தரம் முதலியாரை ஆம். அடிகள் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் பணி ஏற்றுத் தம் குடும்பத்தாருடன், சென்னையிற் குடியேறினார். அடிகளார்க்குச் சென்னை வாழ்க்கை. இனிது இயங்கியதற்குப் பேருதவி புரிந்தவர் இம்முதலியாரேயாவர். இவர் அரசாங்க மொழி பெயர்ப்பாளராய்ப் பணிபுரிந்தவர். சிறந்த குடியில் தோன்றியவர். புலமையறிந்து போற்றும் புலமையர். அடிகளைத் தன் மகனெனக் கொண்டு அவரையும் அவர் குடும்பத்தையும் தம்மில்லத்தே வைத்துச் சில காலம் பாதுகாத்தவர்…
மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் : மறை. திருநாவுக்கரசு
மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் மறைமலையடிகளின் நாட்குறிப்பு : 13-1-1899 : மாண்புமிகுந்த இராமானுசர் கி.பி. 986இல் பிறந்தார். விளக்கம் : இவர், வைணவ சமய ஆசிரியராவர். ‘பாஃசியகாரர்’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர். வைணவ சித்தாந்தத்தைத் தம் பேருரைகளாலான நூல்களாலும், சொற்பொழிவுகளாலும் பாரத நாடெங்கும் பரப்பியவர். வடமொழியிற் பலவும், தமிழிற் சிலவும் ஆக நூல்களையியற்றியவர். -வித்துவான். மறை. திருநாவுக்கரசு