சிட்டினி நகரில் திருக்குறள் மாநாடு
ஆசுதிரேலியாவில் பேரா.மறைமலை இலக்குவனார் ஆத்திரேலியா சிட்டினி நகரில் சித்திரை 13, தி.பி.2045 / ஏப்பிரல் 26, கி.பி. 2014 சனிக்கிழமை திருக்குறள் மாநாடு நடைபெற்றது. பேராசிரியர் மறைமலை இலக்குவனார், ஈழப் பேராசிரியர் சிவகுமாரன் மயிலாடுதுறைப் பேராசிரியர் சிவச்சந்திரன் முதலான பலரும் கலந்து கொண்டனர். ”திருக்குறள் ஒரு பல்துறைக்கலைக்களஞ்சியம்”என்னும் தலைப்பில் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் சொற்பொழிவாற்றினார். குறள் பரப்பாளர் எழுத்தாளர் மாத்தளை சோமு அங்குள்ள தமிழன்பர்களுடன் இணைந்து இம் மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார்.