வாசிங்டன் சிறப்புத் தமிழ் இலக்கியக் கூட்டம்
பிப்பிரவரி 16-இல் வாசிங்டன் பகுதியில் நடந்த சிறப்புத் தமிழ் இலக்கியக் கூட்டமான “தமிழ் இலக்கியத்தில் சமயம்” மிகவும் நன்றாக நடந்து முடிந்தது. பேராசிரியர் மறைமலை இலக்குவனார் ”இமயம் முதல் குமரி வரை முருகன் வழிபாடு” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்தக் கூட்டத்தில் பேராசிரியர் வாசு அரங்கநாதன் சித்தம் பற்றித் ”திருமூலரும் எட்மண்ட் கூசெரியும்” (Edmund Husseri) தலைப்பில் நல்லதொரு உரை ஆற்றினார்கள். …
சாகித்திய அக்காதெமி போக்கை மாற்றிக்கொள்ள பேரா. மறைமலை வேண்டுகோள்!
சாகித்ய அகாதெமி 2013- ஆம் ஆண்டுக்கான படைப்பிலக்கிய விருதுகளை அறிவித்துள்ளது. இவற்றுள், தமிழ்க்கவிதைப் படைப்பிற்கான விருது எதுவும் அறிவிக்கப்படவில்லை. இது குறித்துக் கண்டித்துப் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார், சாகித்ய அகாதெமி, இனியேனும் தன் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அவரது வேண்டுகை வருமாறு :- தமிழ் ஒரு கவிதைமொழி எனப் போற்றுகிறோம். மென்மையும் நுண்மையும் பண்பாட்டு மேன்மையும் கொண்ட தமிழ்க்கவிதை உலகெங்கும் போற்றப்பட்டுவருகிற சூழல் மகிழ்வளிக்கிறது. ஏனைய மொழிப்பிரிவுகளில் அடிக்கடி கவிதைநூல்கள் சாகித்திய அக்காதெமி விருது பெறுவதைக்…
மீனியல் (Icthyology)
– முனைவர் இலக்குவனார் மறைமலை (சென்ற இதழின் தொடர்ச்சி) இக்கட்டுரையில் பயிலும் கலைச்சொற்கள்: குறுக்கம்-Depression; நெருக்கம்-Compression; தோள்துடுப்பு-Pelvic Fin; கால்துடுப்பு- Pectoral Fin; புறத்துடுப்பு-Dorsal Fin; அகத்துடுப்பு-Ventral Fin; வால்துடுப்பு-Caudal Fin; இளகி-Plastic Fin; குறுக்கு வெட்டு-Transverse Section; உள்நுழைக்கோணங்கள்- Entering Angels; வளைவும் இடப்பெயர்வும்-Curves and Displacement; துள்ளல்–Runs; புதையிர்த்தடம்-Fossil
