தமிழில் பிறமொழிக் கலப்பு 3/4 – மறைமலை அடிகள்

தமிழில் பிறமொழிக் கலப்பு 3/4 (தமிழில் பிறமொழிக் கலப்பு 2/4 தொடர்ச்சி) இங்ஙனஞ் செய்தல் இறந்துபோன வடசொற்களை முற்றுமே அங்ஙனம் விடாமற், சில பல சொற்களையேனும் உலக வழக்கிற் பயிலவிடுதற்கு வழியாய் இருத்தலின் அது குற்றமாய்க் கொள்ளப்படுதலாகா தெனின்; இறந்துபோன வடமொழியின் சில சொற்களை உயிர்ப்பிக்கின்றேன் என்று புகுந்து பல நூறாயிரம் மக்களுக்குப் பயன்பட்டு வழங்கி இறக்கச் செய்தல் எள்ளளவும் பொருந்தாது. கையிலுள்ள பெருந்தொகைப் பொருளைக் கடலிற் கொண்டுபோய் எறிந்துவிட்டு, நிலத்தை அகழ்ந்து அடியிலுள்ள பொருள்களை எடுக்க முயல்வார் திறத்திற்குந், தமிழ்ச் சொற்களைக் கைந்நெகிழ…

தமிழில் பிறமொழிக் கலப்பு 2/4 – மறைமலை அடிகள்

தமிழில் பிறமொழிக் கலப்பு 2/4 (தமிழில் பிறமொழிக் கலப்பு ¼ தொடர்ச்சி) அங்ஙனமாயின், வேற்று நாட்டுச் சொற்கள் தமிழிற் கலந்தது போலவே, தமிழ்ச் சொற்களும் மற்றைத் தேயமொழிகளிற் கலந்து காணப்படுதல் வேண்டுமேயெனின்; ஆம், தமிழ்ச்சொற்கள் பல பழைய மொழிகளிலுங் கலந்து வழங்கவேபடுகின்றனவென்று கடைப்பிடிக்க. ஆணி மீனம் நீர் தாமரை கலை குடம் முதலான பலசொற்கள் ஆரிய மொழியிலும், அசை அருவி இரும்பு ஈன எல்லாம் மென்மை முகில் முதலான பல சொற்கள் ஆங்கிலம் இலத்தீன் கிரேக்கு முதலான ஐரோப்பியர் மொழிகளிலும், அவா இரு ஊர்…

தமிழைத் தூயதாகப் பேணல் ஒவ்வொருவரின் கடமையாம் – மறைமலையடிகள்

தமிழைத் தூயதாகப் பேணல் ஒவ்வொருவரின் கடமையாம்!  தொன்றுதொட்ட சிறப்பும் இலக்கண இலக்கிய வரம்புந், தனக்கெனப் பன்னூறாயிரஞ் சொற்களும் வாய்ந்து, இன்றுகாறும் வழக்கு வீழாது உயிரொடு உலாவிப் பன்னூறாயிரம் மக்கட்குப் பெரிது பயன்பட்டு வரும் நமது இனிய செந்தமிழ் மொழியை அயல்மொழிச் சொற்கள் விரவாமற் பாதுகாத்துத் தூயதாய் வழங்கி அதனை வளம்பெறச் செய்வது தமிழராயினார் ஒவ்வொருவர்க்கும் இன்றியமையாத கடமையாம். சில நூற்றாண்டுகளாய்த் தோன்றி இலக்கண இலக்கிய வரம்பில்லாது தமக்கெனச் சில சொற்களேயுடைய மொழிகளையும், உலக வழக்கிற்குச் சிறிதும் பயன்படாமல் இறந்துபட்ட மொழிகளையும் அவற்றிற்குரியாரும் அவற்றிற்கு உரியார்…