மலரினும் மெல்லியது காதல் ! – இரா.இரவி
மலரினும் மெல்லியது காதல் ! மலரினும் மெல்லியது காதல் ஆனால் மலையினும் வலியது காதல் ! ஒருவன் ஒருத்தியை நேசித்து விட்டால் உயிர் உள்ளவரை நேசிப்பது காதல் ! தடைகள் ஆயிரம் வந்த போதும் தகர்த்து இணைவதே உண்மைக் காதல் ! புறஅழகுப் பார்த்து வருவது அல்ல காதல் அகஅழகு ஈர்த்து வருவதே மெய்யான காதல் ! என்னவென்று விளக்கமுடியாவிடினும் ஏதோ ஒன்று இணையிடம் பிடித்து இருக்கும் ! இடையில் வந்தவள் என்றபோதும் மன எடையில் உயர்ந்து நிற்பவள் காதலி ! உன்னத காதலிக்கு…