நான் பெண்தான் மின்னூல் வெளியீடு :http://FreeTamilEbooks.com கதை உருவாக்கம்: நிருமலா இராகவன், மலேசியா மின்னஞ்சல்: nirurag@gmail.com மேலட்டை உருவாக்கம்: மனோசு குமார் மின்னஞ்சல்: socrates1857@gmail.com மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள் மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com உரிமை – பொதுமைப்படைப்பு(Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.)  எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். முன்னுரை வணக்கம். எத்தனையோ எதிர்பார்ப்புகளுடன் இத்தொகுப்பைப் படிக்க உட்கார்ந்திருப்பீர்கள். முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வகையினரைப் பாருங்கள். 1              ஆண்கள் தவறே செய்யாதவர்கள்; அப்படியே தவறு செய்தாலும், ஒரு எழுத்தாளருக்கு அதைச் சுட்டிக்காட்ட எந்த அதிகாரமும் கிடையாது என்று ஆணித்தரமாக நம்புகிறவர்….