திருக்குறள், சங்க இலக்கிய விழுமியங்கள் – 2/2 : வெ.அரங்கராசன்
(திருக்குறள், சங்க இலக்கிய விழுமியங்கள் – 1/2 : வெ.அரங்கராசன் தொடர்ச்சி) திருக்குறள், சங்க இலக்கிய விழுமியங்கள் – 2/2 6.0.விருந்தோம்பல் என்னும் அருந்திறல் விழுமியம் அருந்தமிழர்தம் தனிச்சிறப்புக்களுள் ஒன்று விருந்தோம்பல் என்னும் பெருந் திறல் விழுமியம் ஆகும். முற்காலத்தில் முன்பின் தெரியாதவர்களே விருந்தினர்கள் எனப்பட்டனர். இதனைத் தொல்காப்பியர், விருந்தே தானே புதுவது கிளந்த யாப்பின் மேற்றே. [தொல்.செய்.540] என்னும் நூற்பாவழி நுவல்கிறார். இரவானாலும் பகலானாலும் புதியவர்கள் இல்லத்திற்குப் பசியோடு வரும்…
இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 31-50 – இலக்குவனார் திருவள்ளுவன்
(இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 11- 30 – தொடர்ச்சி) இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 31-50 காவிரி புரக்கும் நன் நாட்டு பொருந – நல்லிறையனார, புறநானூறு, 393.23 (காவிரியால் காக்கப்படும்நல்லநாட்டின் பொருந) முழங்குநீர்ப் படப்பைக் காவிரிக் கிழவன் – ஐயூர் முடவனார் , புறநானூறு, 399. 11-12 (முழங்குகின்ற நீர்நலம் உடைய காவிரி பாயும் நாட்டுத் தலைவன்) 33. காவிரி புரக்கும் நாடு கிழவோனே – முடத்தாமக்கண்ணியார், பொருநராற்றுப்படை, 248 (காவிரியால் காக்கப்படும் நாட்டிற்கு உரியவனே!) 34. மலைத்தலைய கடல்…
குறிஞ்சி நிலத்தவர் உணவு – மா.இராசமாணிக்கம்
குறிஞ்சி நிலத்தவர் உணவு சோழநாட்டுக் குறிஞ்சி நிலமக்கள் தேனையும் கிழங்கையும் உண்டார்கள். பிற நிலத்தார்க்கும் விற்று மீன், நெய்யையும் நறவையும்(தேன்) வாங்கிச் சென்றார்கள் (பொ.ஆ.படை அடி:214-15). சிறப்பு நாள்களில் நெய் மிக்க உணவு உட்கொள்ளப்பட்டது. (குறிஞ்சிப்பாட்டு அடி: 304). நன்னனுக்குரிய சவ்வாது மலையில் அடிவாரத்தில் இருந்த சிற்றூர்களில் வாழ்ந்த மக்கள் திணைச்சோறும் நெய்யில் வெந்த இறைச்சியையும் உண்டார்கள். (மலைபடுகடாம் அடி:168-169). நன்னனுடைய மலைகளைச் சேர்ந்த குறிஞ்சி நிலத்தார் பெண் நாய் கடித்த உடும்பின் இறைச்சியையும் கடமான் இறைச்சியையும் பன்றி இறைச்சியையும் உண்டனர். நெல்லால் சமைத்த…
சங்க இலக்கியத்தில் ஒலிச்சூழலமைவு – 1: மறைமலை இலக்குவனார்
1 கட்டுரையின் நோக்கம்: கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும் உணர்வுடை மாந்தராக விளங்கிய சங்கத் தமிழர், தம்மைச் சுற்றியும் ஒலிக்கும் ஒலிகளையறிந்து அவ்வொலிகளின் வழித் தம் இயக்கத்தை அமைத்துக்கொண்டனர். வளியின் போக்கையறிந்து நீரில் கலன்களைச் செலுத்தும் முறைமையையறிந்த தமிழர்,நிலத்தில் தம்மைச் சூழ்ந்தமையும் ஒலிகளின் மாறுபாடுகளை வகைப்படுத்தியறிந்து ஊறு நேர வாய்ப்புள்ள வழிகளைத் தவிர்த்துக் கொள்ளும் விழிப்புணர்வைப் பெற்றிருந்தனர். இனிய ஓசைகளைச் செவியாரத் துய்த்தும் இன்னா ஓசைகளை இனங்கண்டு பிறர்க்குரைத்தும் ஒலிகளை ஒப்புநோக்கிக் கூறியும் தம்மைச் சூழ்ந்திருந்த ஒலிச்சூழலமைவை அவர்கள் ஆய்ந்துரைத்த திறம்…
திசைகாட்டும் கல்லை நிறுவிய தமிழர்கள்
தமிழ் வேந்தர் தம் நாட்டின்கண் வழிப் போவார்க்குரிய இடையூறுகளை விலக்கி, எல்லாரும் போக்குவரவு புரிதற்குரிய பெருவழிகளை அமைத்து அவ்விடங்களில் விலங்குகளாலும் கள்வர் முதலிய தீயவர்களாலும் துன்பம் நேராதபடி படைமறவர்களை நிறுவக் கருதினர். பலவூர்களுக்குச் செல்லும் வழிகள் ஒன்று கூடி மயங்குதற்குரிய கவர்த்த வழி ‘கவலை’ எனப்படும். இவ்வாறு பலவழிகள் கூடிய நெறியிற் செல்வார். தாம் செல்லும் ஊருக்குரிய வழி இன்னதெனத் தெரிந்து கொள்ள இயலாது. மயங்குதலியல்பு வழிப்போவார் இவ்வாறு மயங்கி இடர்பாடுதலாகா தென்றெண்ணிப் பண்டைத்தமிழர் பல வழிகள் சந்திக்கும் இடத்திலே திசைகாட்டும் கல்லை…
சாலை வழிகாட்டி அமைத்தவர்கள் தமிழர்கள்
சாலை வழிகாட்டி அமைத்தவர்கள் தமிழர்கள் பச்சை மரத்தில் கூரிய கற்களைக் கொண்டு சாலை எந்த ஊருக்குச் செல்கிறது என்பதைத் தமிழர்கள் பொறித்து வைத்திருந்தனர். வழிப்போக்கர்களுக்கு உதவியாக எழுதப்பட்டவற்றைச் சாதாரண மக்களும் படித்தறியும் அளவுக்கு எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பது புலனாகும். “செல்லும் தேஎத்துப் பெயருங் கறிமார் கல்லெறிந் தெழுதிய நல்லரை மராஅத்த“ – மலைபடு கடாம்