கலைச்சொல் தெளிவோம் 52: மலைப்பாம்பு-boa ; மாசுணம்-python
52. மலைப்பாம்பு-boa; மாசுணம்-python மலைப்பாம்பு பைதான்(python) என்றாலும் போ (boa)என்றாலும் மலைப்பாம்பு என்றுதான் சொல்கின்றனர். களிறு அகப்படுத்த பெருஞ் சின மாசுணம் (நற்றிணை 261.6) துஞ்சுமரம் கடுக்கும், மாசுணம் விலங்கி (மலைபடுகடாம் 261) ஆகியவற்றில் மாசுணம் என மலைப்பாம்பின் வகை குறிக்கப்பட்டுள்ளன. எனவே, மலைப்பாம்பு-boa மாசுணம்-python என வேறுபடுத்தலாம்.
மதுமயக்கத்தில் மலைப்பாம்பிற்கு இரையானார்
கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டத்திலுள்ள அட்டப்பாடி வனப்பகுதியில் குடிபோதையில் உறங்கி கொண்டிருந்த ஒருவரை மலைப்பாம்பு ஒன்று விழுங்கி விட்டது. வனப்பகுதி அருகே உள்ள இடத்தில் மது அருந்திவிட்டு மயக்கத்தில் அயர்ந்துவிட்டவரையே மலைப்பாம்பு விழுங்கியுள்ளதாக ஊரினர் தெரிவித்துள்ளனர். பாம்பின் வயிற்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டதாகவிம் தெரிவிக்கப்படுகிறது.