புசல்லாவ இந்து தேசியக் கல்லூரியில் மண்சரிவுப் பேரிடர்! பெற்றோர்கள் மாணவர்கள் அச்சத்தில்!   தொடர்ந்து மலையகத்தில் காணப்படும் சீரற்ற காலநிலையில் புசல்லாவ இந்து தேசியக்கல்லூரி மண்சரிவு  கண்டத்தை எதிர்நோக்கியுள்ளது. குறித்த கல்லூரியின்  திடலில் இடி மின்னலுடன் மழை பெய்த வேளையில் ஏறத்தாழ 25 அடி ஆழமான குழி ஒன்று உருவாகியுள்ளது. இதன் எதிரொலியாகப் பாடசாலை கட்டடங்களில் சிறு சிறு வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால், மாணவர்கள் அச்சத்துடன் கல்வி பயின்று வருகின்றனர். நிலைமை தொடர்பாக   ஊர்ச்சேவகர் ஊடாக உடபளாத்த  பகுதிச் செயலாளருக்கும்   பேரிடர் முகாமைத்துவ நிலையத்திற்கும்…