ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 39 – மலையும் குன்றும் – தொடர்ச்சி
(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 38 – மலையும் குன்றும் தொடர்ச்சி) மலையும் குன்றும் – தொடர்ச்சி காளத்தி மலை தென் கயிலாயம் என்று கருதப்படும் திருக்காளத்தி மலை அன்புருவாய கண்ணப்பர் வழிபட்டுப் பேறு பெற்ற அரும் பெரும் பதியாகும்.12 “கன்றினொடு சென்று பிடி நின்று விளையாடும்” காளத்தி மலையைக்கண்களிப்பக் கண்ட திருஞான சம்பந்தர், அங்குக் கண்ணப்பர் திருவுருவைத் தரிசித்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்து, அவரடியில் விழுந்து போற்றிய பான்மையைத் திருத்தொண்டர் புராணம் விரித்துரைக்கின்றது.13 திருவாட் போக்கி மலை திருச்சி நாட்டுக்…
ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 38 – மலையும் குன்றும்
(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):37 – தேவும் தலமும் தொடர்ச்சி) மலையும் குன்றும் திருவண்ணாமலை ஈசனார் கோவில் கொண்டு விளங்கும் திருமலைகளைத் தொகுத்துரைத்தார் திருஞான சம்பந்தர்: “அண்ணாமலை ஈங்கோயும் அத்தி முத்தாறகலா முதுகுன்றம் கொடுங்குன்றமும்” என்றெடுத்த தேவாரத்தில் அமைந்த அண்ணாமலை வட ஆர்க்காட்டிற் சிறந்து திகழும் திருவண்ணாமலையாகும். ஆதியும் அந்தமும் இல்லாத இறைவன் அரும் பெருங் சோதியாகக் காட்சி தரும் திருமலை, அண்ணாமலை என்பர்.1 திருஈங்கோய் மலை திருச்சி நாட்டைச் சேர்ந்தது ஈங்கோய் மலை. அங்கு எழுந்தருளிய இறைவனை…